பக்கம்:இன்றும் இனியும்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத்தின் ஆற்றல் 261 அவை ஓசை முதலியவற்றைக் கேட்கும், பார்க்கும், சுவைக்கும். ஆனாலும் மனம் இல்லாத காரணத்தால் புல அனுபவம் அவற்றுக்கு இல்லை. அனுபவத்தைப் பெற உதவுவது மனம் என்ற ஒன்றுதான். மனத்தின் தொழில் இந்த மனத்தின் தலையாய தொழில் எண்ணுவது தான். எண்ணத்தின் மூலமாகவே மனத்தின் இருப்பை நாம் அறிய முடிகிறது. மனம் என்ற அந்த ஒப்பற்ற கருவி இரு வகைகளில் பணி புரிகின்றது. அறிவை தொழிற்படச் செய்வதும் இம் மனந்தான். அறிவு எவ்வாறு தொழிற்படுகிறது? அதுவும் எண்ணத்தின் மூலமாகத்தான். மனத்தில் தோன்றும் எண்ணமே அறிவைத் துாண்டித் தொழிற்படச் செய்கிறது. தொழிற் படுவது அறிவேயானாலும் எண்ணம் அல்லது சிந்தனையின் மூலமாகவே அறிவும் தொழிற்படுகிறது என்பதை அறிவோம். எண்ணம் என்பது சொற்கள், மொழி என்பவற்றின் உதவியாலேயே அறிவை வளர்க்கிறது. மாபெரும் விஞ்ஞானியான ஐன்ஸ் டினைப் பார்த்து வியப்படைகிறோம். உலகம் கண்டு வியக்கும் ரிலட்டிவிட்டி கொள்கை'யை அவர் காண்பதற்கு உதவியாக இருந்தது எது? எந்த ஒரு விஞ்ஞானக் கருவியும் உதவவில்லை. அவருடைய எண்ணம் ஒன்றுதான் தொழிற்பட்டது. இதுவரை உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் கனவிலும் கருதாத ஒரு மாபெரும் தத்துவத்தை அவர் எடுத்துக் கூற உதவியது அவருடைய எண்ணம் மட்டுமே என்பதை அறியும்பொழுது எண்ணத்தின் ஆற்றல் எத்தகையது என்பதை அறிய முடிகிறது.