பக்கம்:இன்றும் இனியும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 அ.ச. ஞானசம்பந்தன் திண்ணிய எண்ணம் 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணி யார் திண்ணியார் ஆகப்பெறின் என்பது வள்ளுவம். எண்ணியர் என்றால் எண்ணுபவர் என்பது பொருளாகும். திண்ணியர் என்றால் வலுவுடையவர் என்பதே பொருள். வலுவுடையவர் என்று கவிஞன் கூறும்பொழுது எண்ணுபவருடைய உடல் வலிமை முதலியவற்றையா குறிக்கிறான்? உறுதியாக இல்லை என்று கூறிவிடலாம். அப்படியானால் திண்ணியர் என்பதன் பொருள் யாது? வலிமையான எண்ணம் உடையவர் என்பதே இதன் பொருளாகும். எண்ணும் எண்ணத்தில் கூட வலியின்மை, வலிமை என்ற வேறுபாடு உண்டா என்று வினவலாம். ஆம் ! எண்ணங்களில் வலிமையான எண்ணங்கள் உண்டு. 45 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் சூரியன் அத்த மிக்காத ஒரு சாம்ராஜ்யத்தை எவ்வித ஆயுத பலமும் இல்லாமல் எதிர்த்தார் என்றால் அது எவ்வாறு முடிந்தது? அவருடைய எண்ணத்தின் வலுவி னாலேயே இது இயன்றது! அதைவிடப் புதுமை என்ன என்றால் அந்த எண்ணத்தின் எதிரே அந்த சாம்ராஜ்யமும் தலை தாழ்ந்து தோல்வியுற்றது! அம் மட்டோ? ஊக்கம் இழந்து, எவ்விதக் குறிக்கோளும் இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தளர்ந்து கிடந்த கோடிக்கணக்கான இந்தியர்களை வீறுகொண்டு எழச் செய்ததுவும் அத் தனி மனிதனுடைய எண்ணத்தின் ஆற்றலேயாம். . இருவகை மனிதர்கள் - இதன் எதிராக மனக்கோட்டை கட்டிக்கொண்டு எவ்வித முயற்சியும் செய்யாமல் வாழ்ந்து மடிகின்ற