பக்கம்:இன்றும் இனியும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 ல் அ.ச. ஞானசம்பந்தன் புத்தருக்கு அடுத்தபடியாக எண்ணத்தின் ஆற்றலை நன்கு விளங்கிக் கொண்டவர் திருவள்ளுவ ராவர். அவர் மனத்துக்கண் மாசு இலனாதல் அனைத்து அறன் என்று கூறுவதன் உட்கருத்து இதுவேயாம். இன்னும் விளக்கமாகக் கூற வேண்டிய நிலை வந்தவுடன் எண்ணியர் திண்ணியராய் இருப்பின் எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவர் என்றும் கூறினார். மனிதனுடைய சிந்தனை, செயல் ஆகிய அனைத்திற்கும் மூலமாக விளங்குவது அவனுடைய எண்ணங்களேயாகும். இந்த நினைவு அல்லது எண்ணம் தோன்றுகிற இடம் யாது என்பதில் விஞ்ஞானிகளிடம் கருத்து வேறுபாடு உண்டு. இன்னுங் கூற வேண்டுமாயின் எண்ணங்கட்கு இத்துணை ஆற்றல் உண்டு என்பதைக்கூட விஞ்ஞானம் இப்பொழுதுதான் உணரத் தொடங்கி யுள்ளது. விஞ்ஞானம் கூறும் கருத்து எண்ணங்கள் தோன்றுவது மூளையின் ஒரு பகுதியிலாகும் என்று கருதுகிற விஞ்ஞானம் சில திடுக்கிடும் கருத்துகளையும் வெளியிடுகிறது. மிகச் சாதாரண மனிதனுக்குக் கூட மாபெரும் செயல்களை நிகழ்த்தக்கூடிய எண்ண ஆற்றல் உண்டு என்றும், சாதாரண மனிதர்கள் தம் மூளையின் இந்த ஆற்றலில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான சிறிய பகுதியைத் தான் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறுகிறது. மேலும் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற மேதைகள் கூடத் தம் மூளையின் ஆற்றலில் 15 சதவிகிதமே பயன்படுத்து கின்றனர் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. 15 சதவிகிதத்தைப் பயன்படுத்திக்கூட ரிலட்டிவிட்டிக்