பக்கம்:இன்றும் இனியும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வீரர் வழிபாடு தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரெல்லாம் வீரரே! தம் வாழ்நாள் முழுமையும் அவ்வாறே வாழ்ந்து, நாட்டுப் பணியும் மக்கட் பணியுமே தமது கடன் எனப் பணியாற்றிய ஒரு வீரர் குறித்து கட்டுரை வரைவது மிகவும் பொருத்தமுடையதே. - முதலாவது வீரர் யார்? வீரம் என்பது யாது? எனப் பார்ப்போம். மக்கள் யாவரும் இறைவனால் படைக்கப்பட்டவரேயாவர். ஆனால், உயிர் வளர்ச்சி முறையில் (Evolution) வரும் ஒவ்வொருயிரும் அதன் பழைய பிறவிகளுக்கு ஏற்ப இப் பிறவியில் மனோநிலை பெற்றிருக்கும். யாவர்க்கும் பொதுவான உயிர்க் குணங்கள் இருப்பது தவிர, ஒவ்வோர் உயிர்க்கும் சிறப்பாகச் சில குணங்கள் இருக்கும். சிறப்பியல்புகள் காரணமாக அவரவர் பெருமை சிறுமை வெளிப்படும். இதனால் பிறருக்கு நன்மை விளைவிக்கக்கூடிய சிறப்பியல்பு பெற்றோரே பெரியார் எனப்படுவர் என அறிகிறோம். இவர்களது துணைகொண்டே இவ்வுலகம் நடைபெறுகிறது. இவ்வுலகின் சரிதம் அறிய வேண்டின், இவர் சரிதம் காணலே போதுமானது. இவர்களே மக்கள் இனத்தின் தலைவர்கள். உலகைச் சீர்படுத்தி அதற்கு வரம்பிட்டு மனித சமூகம்