பக்கம்:இன்றும் இனியும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத்தின் ஆற்றல் 265 கொள்கையை ஒருவர் கண்டுபிடித்தார் என்றால் மூளையின் முழு ஆற்றலைப் பயன்படுத்துகிறவர் செய்ய முடியாத செயலே இல்லை என்றுகூடக் கூறலாம் அல்லவா? எண்ணத்தின் ஆற்றல் இத்துணை அளவுடையது என்பதை நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர். கருவிகளைக் கொண்டு அளந்தறியும் விஞ்ஞானமும் அடிப்படையில் இந்த எண்ணத்தின் ஆற்றலையே பயன்படுத்துகிறது. பல சமயங்களில் ஏதோ ஒன்றைப் பற்றி ஆய்ந்து கொண்டிருக்கும் நாம் கோவையாகத் தருக்க ரீதியில் எண்ணத் தொடங்குகிறோம். ஒவ்வொரு படியாக நம் எண்ணம் வளர்கிறது. ஒவ்வொரு படியிலும் உண்மை ஓரளவு வெளிப் படுகிறது. அறிவின் துணைகொண்டு செய்யப்பெறும் இந்த எண்ண ஓட்டம் படிப்படியாக வளரும்பொழுது ஒவ்வொரு கட்டத்திலும் காணப்படும் உண்மைக்கு முதற் கட்டத்தில் கண்டது அஸ்திவாரமாக அமையக் காண்கின்றோம். - விஞ்ஞானியும், மெய்ஞ்ஞானியும் இவ்வாறு ஒவ்வொரு படியிலும் கண்டவற்றைப் பற்றியே மேலும், மேலும் சிந்திக்கும்பொழுது மேலும் பல உண்மைகள் விளங்கக் காண்கின்றோம். மேலே செல்ல முடியாதபொழுது சாதாரண மனிதர்கள் இதற்கு மேல் "நம்மால் ஆகாது" எனத் தம் முயற்சியை விட்டு விடுகின்றனர். எண்ண ஆற்றல் உடையவர்கள் அவ்வாறு விடுவதில்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், புத்தர், ஆதிசங்கரர் போன்ற மெய்ஞ் ஞானிகளும் தத்தம் எண்ணங்களின் ஆற்றலை நன்கு அறிந்தவர்களாகலின் விடாப்பிடியாகத் தம் மனத்தில்