பக்கம்:இன்றும் இனியும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 அ.ச. ஞானசம்பந்தன் எண்ணங்களை வளர்த்துக்கொண்டே செல்கின்றனர். ஐன்ஸ்டீன் பல ஆண்டுகளாகத் தன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுத் தன் எண்ணத்தின் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். அதன் பயனாக விஞ்ஞான உலகம் வியக்கும் ஒரு சித்தாந்தத்தை நிறுவினார். ஆதிசங்கரர், புத்தர் போன்ற மெய்ஞ்ஞானிகளும் பல ஆண்டுகள் தம் எண்ணத்தை வளர்த்ததின் பயனாகவே நாம் மெய்யறிவைப் பெற முடிந்தது. இதன் பயனாகவே ஆதிசங்கரர் அத்வைதக் கொள்கையையும் புத்தர் தம் புதிய சமயத்தையும் உலகுக்கு ஈந்தனர். - தனிச் சிறப்பு ஏன்? இறந்தவன் உடலையும் வயது முதிர்ந்தவன் மூப்பால் முறிந்த உடலையும் நாளும் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இவற்றைக் கண்ட சித்தார்த்தன் எண்ணம் வேலை செய்யத் தொடங் கிற்று. ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பலரும் கண்டதுண்டு. ஆனால் ஒரு நியூட்டனுடைய எண்ணம் வேலை செய்யத் தொடங்கிற்று. இவ் இருவருக்கும் வலுவான முறையில் எண்ணம் பணி புரியத் தொட்ங்கிற்று. அதன் பயனாக ஒருவர் உலகம் வியக்கும் மெய்ஞ்ஞானத்தைப் பெற்றார். மற்றவர் உலகம் வியக்கும் விஞ்ஞானக் கொள்கை ஒன்றைக் (புவியின் ஈர்ப்புச் சக்தி) கண்டார். இறந்தவனைக் கண்ட பலரும் ஏன் மனிதன் சாக வேண்டும், ஏன் மனிதன் துயரில் அழுந்த வேண்டும் என்றுகூட எண்ணியிருக்கலாம்! பழம் கீழே ஏன் விழ வேண்டும் என்றுகூடப் பலர் எண்ணி இருக்கலாம். அப்படி யானால் பலரும் இவ்வாறு எண்ணியிருக்கக் கூடும் எனில் புத்தனுக்கும், நியூட்டனுக்கும் மட்டும் ஏன்