பக்கம்:இன்றும் இனியும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத்தின் ஆற்றல் 267 தனிச் சிறப்பை அளிக்க வேண்டும்? இந்த வினா நியாயமானதே! ஏனையோர் இதுபற்றி எண்ணி னாலும் அவர்கள் அதனைத் தொடரவில்லை. காரணம் அவர்கள் திண்ணியர் அல்லர். ஆனால் புத்தனும், நியூட்டனும் திண்ணியர் ஆக இருந்தமை யின் அவர்கள் மேலும் மேலும் அந்த முதல் எண்ணத்தைப் பின்பற்றித் தொடர்ந்து சிந்தித்தனர். அதன் பயனாகப் பெளத்தச் சித்தாந்தமும், புவி ஈர்ப்புச் சித்தாந்தமும் பிறந்தன. எண்ணம் ஆற்றல் உடையது என்பதை நிரூபிக்கவே இந்த உதாரணங்கள். நாம் திண்ணியராக இருந்தால்தான் நம்முடைய எண்ணம் ஆற்றல் உடையதாக இருக்கும். - இனி இந்த எண்ண வளர்ச்சி இருவகையில் பணி புரிவதை மனவியலார் கண்டுள்ளனர். புத்தன், ஐன்ஸ்டீன் நியூட்டன், ஆதிசங்கரர் என்பவர்கட்கு இந்த எண்ண வளர்ச்சி தகுந்த முறையில் (Logical Thinking) முன்னேறிற்று. ஆற்றலுடையவர்கள் எண்ண வளர்ச்சி விஞ்ஞான உண்மையையும், மெய்ஞ்ஞான உண்மையையும் காட்ட முடியும் என்பதை அறிவுறுத்தவே இந்த நால்வரையும் உதாரணமாகக் காட்டினோம். உள்ளுணர்வு என்பது யாது? இனி இதன் மறுதலையாகத் தருக்க முறையில் வளராமல் உள்ளுணர்வினால் (Intution) விஞ்ஞான, மெய்ஞ்ஞான உண்மைகளைக் காண்பதும் உண்டு. இதுவும் ஆற்றலுடைய எண்ண வளர்ச்சியின் ஒரு கூறேயாகும். இன்றைய வரையில் மனவியலார்க்கு உள்ளுணர்வு என்பது புதிராகவே இருந்து வருகிறது.