பக்கம்:இன்றும் இனியும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 அ.ச. ஞானசம்பந்தன் இறைவனை அறியப் பயன்படுவதே உள்ளுணர்வு என்று கூறும் சைபைனோசா (Spinoza) முதல் இது அக மனத்தில் நடைபெறும் எண்ண வளர்ச்சி என்று கூறுகின்ற மனவியலார் வரை பல பிரிவினர் உள்ளனர். உள்ளுணர்வு எவ்வாறு தோன்றி எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதை இன்னும் மனவியலார் அறிய முடியவில்லையாதலின் இதுபற்றிய குழப்பம் இருந்து வருவது நியாயந்தான். புறமணத்தில் எண்ண ஓட்டம் நிகழ்வதை நாமும் ஒருவாறு அறிய முடிகிறது. அறிவின் துணைகொண்டு நடைபெறும் இதனை நாம் அறிய முடிகிறது. மேலும் இந்த எண்ண ஓட்டத்தை நெறிப்படுத்தவும் திசை திருப்பவும், மேலும் உந்தவும் நம்மால் முடியும். நம் புற மனத்தைக் கட்டுப்படுத்தி இதனைச் செய்ய இயலும் என்பதை அவரவர் அனுபவத்திலேயே காண்டல் கூடும். மனத்தைக் கட்டுப்படுத்தி எண்ண ஓட்டத்தைத் தம் விருப்பம் போல் திசை திருப்பும் பயிற்சி உடையவர்கள் நல்ல எண்ண ஆற்றல் உடையவர் களாய் இருப்பர். எண்ணத்தைத் திசை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் உடையவர்கள் விஞ்ஞானிகளாக வும் இருக்கலாம்; மெய்ஞ்ஞானிகளாகவும் இருக்க லாம். இத்தகையவர்கட்கு ஒரோவழி நிகழ்கின்றதே உள்ளுணர்வு. உள்ளுணர்வு பற்றிய இரு வேறு கருத்துகள் இந்த உள்ளுணர்வு எங்கே தோன்றி எவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் நிரம்ப உண்டு. இந்த நாட்டினரைப் பொறுத்தமட்டில் மிகப் பழங்காலந்தொட்டே உள்ளுணர்வு பற்றி அறிந்திருந்தனர் என்று கூறல் பொருந்தும். தக்கவர்கள்