பக்கம்:இன்றும் இனியும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத்தின் ஆற்றல் 9 269 அகமனத்தில் இறையருளால் பொள்ளெனத் தோன்றுவதே உள்ளுணர்வு என்ற கருத்து இங்கு நிலவி வந்துள்ளது. - மேலை நாட்டாரைப் பொறுத்தவரை இக் கருத்து வேறுவிதமாகப் பேசப்படுகிறது. நீண்ட காலம் ஒன்றைப்பற்றி ஒருவர் சிந்திப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தச் சிந்தனை அவருடைய புற மனத்தில் பருமையாக நிகழ்வதாகும். ஆனால் மிக நீண்ட காலம் அவருடைய எண்ண ஓட்டம் ஒரு கருத்தைப்பற்றிச் சுற்றி வந்தமையின் அந்தப் பருமையான எண்ண ஓட்டம் மெள்ள மெள்ள நுண்மை எய்தி அவருடைய அக மனத்தில் பாய்கின்றது. எந்த ஒன்றிற்கு விடை காண வேண்டும் என்று அவர் புற மன எண்ண ஓட்டத்தில் ஈடுபட்டாரோ அந்த விடை புற மன எண்ண ஒட்டத்தில் புலப்படாமல் அகமனத்தில் எதிர்பாரா. நேரங்களில், ஏன்? உறக்கத்திலுங்கூடத் தோன்றுவது, உண்டு. காரண காரிய அடிப்படையில் இது தோன்றுவதில்லை. எனவேதான் இதனை உள் ளுணர்வு என நாம் கூறுகிறோம். இதனை ஏற்றுக் கொள்ளாத மேனாட்டு மனவியலார் சிலர் புற மன எண்ண ஓட்டம் ஓரளவைத் தாண்டிச் செல்லும் பொழுது அக மனத்திலும் சென்று படிந்து விடுகிறது என்பர். - அகமனத்தில் படிந்ததை நாம் கட்டுப்படுத்தவோ அறியவோ முடியாது. ஆனாலும் அகமனத்துப் பதிந்த இந்த எண்ண ஓட்டம் அதனுள்ளேயே விரிந்து ஒரு வகையாக விடை கண்டு விடுகிறது. அந்த விடையின் வெளிப்பாடே உள்ளுணர்வு என்று கூறப்பெறுகிறது