பக்கம்:இன்றும் இனியும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 €. அ.ச. ஞானசம்பந்தன் என்று அவர்கள் கூறுகிறார்கள். நம் புற மனக் கட்டுப் பாட்டுக்கும் உந்தலுக்கும், ஏவுதலுக்கும் அப்பாற் பட்டது இது என்பதை அவர்களும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். புற மனத்தில் நிகழும் எண்ண ஒட்டத்துக்கு உள்ள வலிமை நம் முயற்சியால் தரப் பெறுவது. ஆனால் உள்ளுணர்வுக்கு ஏற்படும் வலிமை தம் முயற்சிக்கு அப்பாற்பட்டது. என்றாலும் புற மனத்தில் நிகழும் எண்ண ஓட்டம் மேலோங்கி வழிவதனாலேயே அக மன எண்ண ஓட்டம் ஏற்படு கிறதாகலின் புற மன ஓட்டம் அதிக வலுவுடைய தாயின் அக மன எண்ண ஓட்டமும் வலுப்பெற்று விளங்கும். சுயக் கற்பனை எண்ணத்தின் ஆற்றல் மற்றொரு வகையிலும் தொழிற்படுகிறது. வலுவான எண்ண ஓட்டம் பொருள்களை ஏன்? தன்னைப் படைக்கும் மனித னையே கூட மாற்ற வல்லதாகும். எவ்வித நோயும் இல்லாமல் நல்லுடம்புடன் இருக்கும் ஒருவன் தனக்கு நோய் இருப்பதாக நம்பி ஓயாமல் அது பற்றியே நினைப்பதன் மூலம் அந்த நோயை உண்மையிலேயே பெற்று விடமுடியும். இதனை மேனாட்டார் சுயக் sölusogar (Auto suggestion) ersáruff. தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யச் சென்ற பல இளைஞர்கள் இந்தச் சுயக் கற்பனை மூலம் அந் நோயைப் பெற்று, அதன் விளைவுகளையும் உடலில் பெற்றதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியேறிய சில் நாட்களில் நோய் முற்றும் நீங்க்ப் பெற்றதாகவும் மனவியலார் கூறுகின்றனர். 'யாது ஒன்று நினைக்கத் தான் அதுவாதல்’ என்று சைவ சமயவாதிகள்