பக்கம்:இன்றும் இனியும்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத்தின் ஆற்றல் 271 இதனைக் குறிக்கின்றனர். சுயக் கற்பனையாகிய எண்ண ஓட்டத்தின் வலு இத்தகையது என்பதை இன்றைய விஞ்ஞான - மனவியலார் காண்பதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன்னரே நம் முன்னோர் அதனை அறிந்து தான் அதுவாதல் நிலையும் அதற்கு உண்டு எனக் கூறிச் சென்றனர். சுயக் கற்பனையாகிய ஆட்டோசஜஷன் என்பது, இல்லாத ஒரு நோயை உண்டாக்கி அந்நோய் உடலில் செய்கின்ற மாற்றங் களையும் செய்ய முடியும் என மனவியலார் கூறுவதை அறியும் பொழுது நம் முன்னோரின் தீர்க்கதரிசனத்தை அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை. செயற்கருஞ் செயலா இவை ? இல்லாத நோயை உண்டாக்கி உடற்கூறிலும் மாற்றத்தைத் தரும் ஆற்றல் சுய்க் கற்பனைக்கு உண்டு என்றால் இதனைத் தலை கீழாகவும் செய்ய முடியு. மன்றோ? நோயால் வாடும் ஒருவன் தனக்கு அத்தகைய நோயே இல்லை என்று வலுவாக நினைப்பதன் மூலம் உண்மையிலேயே அவனிடம் உள்ள நோயையும் குணப்படுத்திக்கொள்ள முடியும் அல்லவா? இதனையே நம் முன்னோர், தியான வழியாலும், பக்தி வழியாலும் தமக்குற்ற இடரைப் போக்கிக் கொண்டனர் என்று கூறினர். ஆழ்ந்த தியானத்தின் மூலம் இத்தகைய ஒரு காரியத்தை ஒருவன் செய்து கொள்ள முடியும் என்பதை அறிந்த பிறகு இதற்கு அடுத்த நிலையை எளிதில் புரிந்து கொள்ளலாம். இத்தகைய தியானத்தின் மூலம் பிறருடைய நோயைப் போக்கவும் கூடும். எண்ணத் தின் ஆற்றலுக்கு இதுவும் எடுத்துக்காட்டாகும். நாயன் மார்கள், இயேசு போன்றவர்கள் நோயுற்றவர்களைத் தடவிக்கொடுத்து அவர்கள் நோயைப் போக்கினர்