பக்கம்:இன்றும் இனியும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 அ.ச. ஞானசம்பந்தன் என்பதை அறிகிறோம், இது எவ்வாறு முடிந்தது? தங்கள் எண்ணத்தின் ஆற்றலால்தான் இதனைச் செய்தனர். எனினும் தாம் செய்ததாகக் கூறாமல் இறைவன் தம்மைக் கருவியிாகக் கொண்டு இதனை முடித்தான் என்றே கூறினர். இவற்றை இன்று செயற்கருஞ் செயல்கள் என்று கூறுகிறோம். அவ்வாறு கூறுவது சரியா எனச் சிந்திக்க வேண்டும். தியானம் ஏன் ? . -- தியானத்தின் பெருமையை நம் முன்னோர் வலியுறுத்தியதன் நோக்கம் என்ன என்பதை இன்று ஒருவாறு அறிய முடிகிறது. எண்ணத்தின் ஆற்றலை நன்கு அறிந்த ஒரு மனிதன் நற்பண்புகளால் உயர வேண்டுமாயின் அவனுடைய எண்ணங்களை வலுவுடையதாக்கி வளர்க்க வேண்டும். அலைந்து திரிகின்ற மனம் வலுவான ஆற்றல் பொருந்திய எண்ணத்தைப் பெறவோ, வளர்க்கவோ முடியாது. வலுவுடைய எண்ணங்களை வளர்க்க ஒரு முகப்பட்ட மனம் வேண்டும்; அந்த ஒரு முகப்பட்ட மனம் தியானத்தின் வழியில்தான் கிடைக்கும். மோட்சம் போக விரும்புபவர்கள் மட்டுமே தியானம் மேற் கொள்ள வேண்டும் என்ற தவறான எண்ணம் சிலரிடையே இருக்கக் காண்கிறோம். எண்ணத்தின் ஆற்றலை நன்கு அறிந்து, அதன் பயனை அடைய விரும்புபவர்கள் மனத்தை ஒரு முகப்படுத்தத் தேவையான தியான வழியை மேற்கொள்ள வேண்டும். மனம் ஒரு முகப்பட்டவுடன் தூய எண்ணங்களை அதில் நிரப்பி வலுவுடையதாகச் செய்து அவற்றை வளர்க்க வேண்டும். அதன் பயனாக ஒரு மனிதன் எதனையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பெற முடியும். எண்ணத்தின் ஆற்றல் அளவிடற்கரியது. - - . . . . . . .