பக்கம்:இன்றும் இனியும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அ.ச. ஞானசம்பந்தன் அதன்வழி நடைபெறுமாறு செய்வோர் இவ் வீரரே, உலகின்கண் இன்று காணப்படும் செயற்கருஞ் செயல்கள், முடிந்தனவும் நடக்கின்றனவும் நடைபெறப் போகின்றனவும் ஆன அனைத்தும் இவ் வீரரது கனவிற்றோன்றி நனவில் வெளிப்பட்டனவேயாம். இவ் வீரர்களைப்பற்றிக் காணும் காலம் வீண் காலமாகாது; படிப்பார்க்கு உறுதுணையாய் நிற்கும். வ்வகை வீரர்கள் கருவில் திருவுடையராய்த் தோன்றுகின்றனரேயன்றிப் பிறரால் ஆக்கப்படுவ தில்லை. அவர்கள் யாண்டுத் தோன்றினும், எப்பொழுது தோன்றினும் உலகம் அவர்களை நன்கு அறிந்து கொள்கிறது; அவர்களை வெளிக்குக் கொணர்ந்து அவர்கள் சொற்படி நடக்க முற்படுகிறது: அவர்களைப் போற்றி அவர்கள் பின் செல்கிறது. எத்துணை முன்னேற்றம் ஏற்படினும் இத்தகைய வீரர்களைப் புறக்கணித்தல் இயலாத காரியம். நாகரிகம் என்ற அழுக்கு மிகுதியும் ஏறாத மிகப் பழங் காலத்தில், மனித சமூகம் திறந்த மனத்தோடு இயற்கையின் உண்மைத் தன்மையை, அவள் காட்டிய வண்ணம் அறிந்து கொள்ளும் சக்தியுடையதாக இருந்தது. ஆழ்ந்ததும், தூய்மையானதும், ஏற்றுக் கொள்ளும் சக்தியும் உடைய அப்பழங்கால மனிதனுடைய மனம், இயற்கையின் சக்திகளைக் கேவலம் ஒரு பெயரிட்டு அழைத்துவிட்டு அதனோடு திருப்தி அடையவில்லை. அதற்கு மாறாக, இயற்கை யின் பெருமையிலும் சக்தியிலும் ஈடுபட்டு நின்றது; அதற்கொரு பெயரிட்டழைக்கும் சக்தியற்றிருந்தது. மனிதனுக்கு இயற்கை அன்னை, மாயோன் மேயகாடுறை உலகாகவும், சேயோன் மேய மைவரை உலகாகவும், தீம்புனல் உலகாகவும், பெருமண