பக்கம்:இன்றும் இனியும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர் வழிபாடு 17 லுலகாகவும் அவனது மனம் எவ்வளவு விரிந்து செல்லினும் அவ்வளவுக்கும் இடந்தரும் சக்தி வடிவாகவும், என்றும் அவனுக்குப் புத்துணர்ச்சிகளை ஊட்டும் சித்துப் பொருளாகவும் இருந்தாள். இன்றும்தான் என்ன ? எத்துணைப் பெயர்கள் வைத்தும் இயற்கையின் வடிவங் கண்டார் யார்? இன்னும் அவள் கற்பனை கடந்த சோதியாகத் தானே உள்ளாள் ! ஆயின், இன்றைய மனிதன் பழக்க வழக்கங்களால், போலி நாகரிகம் என்று கூறப்படும் இருப்புக் கூட்டில் அடைபட்டு, அதற்கு அப்பாற் காணும் தன்மையை இழந்து நிற்கின்றான். என்றைக் காவது அறிவியல் நூல் (Science), இயற்கையின் தன்மையும் வன்மையும் இத்துணைதான் என்று கூறியது உண்டோ? அவ்வாறு கூறுமாயின் அது அறிவியல் நூல் ஆமோ? அறிவியல் துறையில் உண்மை காணமாட்டாதார் அன்றோ, இயற்கையின் முடிவை விஞ்ஞானம் கூறிற்று என்று கூறுவர்? இத்தகைய இயற்கை அன்னை காலம் என்ற பெருவெளி வழியே செல்கின்றாள். காலம்! சற்று நின்று ஆராய்வோ மாயின் எல்லையற்றதாய், ஓய்வற்றதாய் சென்று கொண்டிருக்கும். அக்காலம், எல்லையற்ற வேகத்தில் புரண்டு செல்கையில் இவ்வண்டம் அதன்மீதன்றோ மிதந்து செல்கின்றது. இவ்வாறு செல்கின்ற அண்டத்தின்கண் உள்ள உலகம் எங்கே? அதன் ஒரு சிறு வடிவாம் தேசம் எங்கே? அதன் அங்கை என உள்ள நாடு எங்கே? ஊர் எங்கே? அவ்வூரிலுள்ள சிறு மனிதன் எங்கே? இவனா எல்லையற்ற இயற்கையின் வன்மையை ஆராய்பவன்? சக்தியற்ற மனிதனா இதன் தன்மையை ஆராய்ந்து முடிவு காட்டுபவன் சக்தி: சக்தி; யாண்டும் சக்தி வடிவே துலங்குகின்றது. இ.இ.-2