பக்கம்:இன்றும் இனியும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அ.ச. ஞானசம்பந்தன் இத்தகைய சக்தி வடிவான இவ்வுலகை, மக்களின் சிறு மனத்துக்கு உள்ளவாறு விளக்குவான் வேண்டி இயற்கை அன்னையே அவ்வப்போதுள்ள இன்றியமையாமைக்கேற்றபடி வீரர்களை உலகிற்கு அனுப்புகின்றாள். அவர்கள் வந்த பிறகே உலகம் இயற்கையையும் அதன் படைப்பையும் உள்ளவாறு கண்டு மகிழ்கின்றது. இவ் வீரர்களால் மனிதனது அகக்கண் திறக்கப்பட்டபொழுது மனிதன் இயற்கை யின் சக்தியைக் காண்கின்றான். ஒரு புல்லின் வழியாகக்கூட, எல்லையற்ற பரம்பொருளின் வடிவைப் பலகணியின் வழியாகக் காணுவதுபோலக் காண முடிகிறது. யாரொருவன் தானாக இப் பொருள்களின் இயற்கை அழகைக் காணவும், அவ்' அழகின் மூலம் அதனை இயற்றிய பரம்பொருளின் தன்மையை உணரவும் செய்கின்றானோ, அவனைக் கவிஞன் என்றும், கலைஞன் என்றும், சுருங்கக் கூறு மிடத்துக் கருவில் திருவுடையவனென்றும் உலகம் கூறுகின்றது. எனவே, இறைவனுடைய படைப்பைக் கண்டு, இறைவனுடைய தன்மையை உணரக் கூடுமாயின் அப் படைப்புகள் பெருமையுடையன. அன்றோ? அவ்வுயர்ந்த படைப்புகளுள் இம் மானுட சரீரமும், இப் பொறி புலன்களும், இவ்வுயிரும் சிறப்புடையன அன்றோ? அதனாலேதான் போலும் நோவாலிஸ் (Novalis) என்ற பெரியார் "உலகிலேயே ஒரு கோவில்தான் உள்ளது. அது மனித சரீரம்தான்! அதனைவிடத் துய்மையுடையது வேறொன்றுமில்லை மனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது உடலோடு அமைந்த இறைவனுக்கு வணக்கம் செலுத்துவதாகும்; மனித உடலைத் தொழும்பொழுது இறைவனையே தொடுகின்றோம்" என்று கூறினார். எனவே,