பக்கம்:இன்றும் இனியும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அ.ச. ஞானசம்பந்தன் பிற மக்களுக்கு இயற்கையின் உண்மையையும் அவன் படைப்பின் தன்மையையும் எடுத்துக்கூறி மக்கள் நன்கு வாழ வழி வகுப்போரெல்லாம் வீரரே, எனவே, உண்மைக் கவிஞனும், புலவனும், தீர்க்க தரிசிகளாகிய சித்தர்களும், உடல் மனவலிமையுடையாரும் வீரர்களாவர் என அறிகிறோம். இவ் வீரர்கள் வாயால் மக்கட்கு உபதேசித்தோ, அன்றித் தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியோ பிறருக்கு அறிவுச் சுடர் கொளுத்துகின்றனர். முதலாவதாகக் கூறிய கவிஞனையும் புலவனை யும் எடுத்துக் கொள்வோம். மக்களினத்திற்கு அறிவு கொளுத்துதலும் இயற்கையின் தோற்றங்களி லீடுபட்டுத் தன்னை மறந்து, அவ்வியற்கையின் தலைவனின் தன்மையை உன்னி, அதனான் மனத்துள் தோன்றுகின்ற இன்ப ஊற்றை, மொழி என்று சொல்லும் கருவி மூலம் பாடலாக வெளிப்படுத்து பவனே கவிஞனாகிய வீரன். இயற்கையின் தோற்றம் ஒவ்வொன்றும் அவனைத் தன்னை மறக்கச் செய்கின்றது. ஏனையோர் தினங்கண்டும் காணாதது போல் உள்ள அதே பொருள்கள் இவ் வீரன் மனத்தில் நினைத்தற்கரிய எண்ணங்களைக் கிளப்புகின்றன. அவன் இயற்கையூடே பிறந்து, வாழ்ந்து, நினைத்து, மகிழ்ந்து முடிகின்றான். அதனாலேதான் அத்தகைய கிளர்ச்சி அவனுக்கு உண்டாகிறது. அத்தகைய சந்தர்ப்பம் பிறருக்கெல்லாம் வாய்க்கினும் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இயற்கையின் இறைத்தன்மை யாவரும் கண்டுகளிக்குமாறு கிடக்கிறது. அதனை உணருவோர் சைவ சித்தாந்தத் தெள்ளமுது அருந்தினோரை ஒப்பச் சிலரேயாவர். அவரே வீரர். உதாரணமாகச் செஞ்ஞாயிறு தினந்