பக்கம்:இன்றும் இனியும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர் வழிபாடு 21 தோறும் நீலத் திரைக்கடல் விளிம்பில் தோன்றத்தான் செய்கிறது. உலகந்தோன்றியக்காற்றொட்டு இதனைக் கண்ட மக்கள் எண்ணற்றவர். ஆனால் அவர்கள் எல்லோருடைய மனத்திலும் அது ஏதேனும் கிளர்ச்சியை உண்டாக்கிற்றோ! யாதொன்றும் இல்லை. ஆனால், நக்கீரன் என்ற கவிஞன் அதனை நோக்குகிறான். "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு' என நினைக்கின்றான். உடனே அவனுக்குத் தோன்றும் அடுத்த எண்ணம் என்ன? இவ்வியற்கையை எதன் விரிவாக அக் கவிஞன் நினைக்கின்றான்? “கைபுனைந் தியற்றாக் கவின் பெரு வனப்பாகிய முருகாக, இளமை அழகு கடவுட்டன்மை முதலியவெல்லாம் ஒருங்கு திரண்ட முருகாக அன்றோ காண்கிறான்! கண்டதோடு நின்றானா? இல்லையே. அப் பொருளின் தன்மையைப் பலபடியாக எடுத்துப் பேசுகிறான். அம்மட்டோ! அதனிடம் நமக்குள்ள தொடர்பை விளக்குகிறான். அம் முருகனிடம் செல்லின் "இன்னே பெறுதிநீ முன்னிய வினையே’ எனப் பிறருக்கு இன்பத்துக்குரிய வழியை எடுத்தோதுகிறான். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' எனப் பறைசாற்றுகிறான். தமது எண்ணங்கள் முருகனிடம் செல்வார்க்கெல்லாம் முடியுமோ என நினைப்பவரை நோக்கி 'இருள்நிற முன்னர் வளைஇய உலகத்து, ஒரு நீ ஆகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி" என ஐயமறுக்கின்றான். இத்தகைய உயர்நிலையில் நின்று தனது வீரத் தன்மையும் உண்மைத் தன்மையும் தோன்ற, பாடல்களைப் பொழியும் புலவனே. வீரனாவான். அவன் பாடிச் சென்று இன்றைக்கு 2000 ஆண்டுகள் செல்லினும், இன்றும் உலகம் அவனை,