பக்கம்:இன்றும் இனியும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அ.ச. ஞானசம்பந்தன் அவனது விழுமிய கருத்தை, அவனது ஐயமற்ற இயற்கை வழிபாட்டைப் போற்றத் தான் செய்கிறது. இவ் வீரக் கவிஞனை உலகம் வீர வழிபாடு செய்யத்தான் செய்யும். அவன் வாழ்ந்த காலத்திலும் சங்கப் புலவர் கூடி இன்றமிழ்க் கீரன் என வழிபாடு செய்தனர். பாண்டியன், ஏன்? இறைவனுங்கூட அவனது சொற்களுக்கு மதிப்பும் மரியாதையும் தந்தனன். 'மனிதன் நிலையினின்று தாழாமையும், தெய்வத் தால் தாழ்வு நேர்ந்துழி உயிர் வாழாமையுமன்றோ மானம்' எனப் பழந்தமிழன் நினைத்தான்? பெருஞ் சித்திரனார் என்ற பழந்தமிழ்ப் புலவனைச் சற்று நோக்குவோம்; வறுமைக் கடற்கு எல்லை தேர்ந்த புலவன் வீட்டு வறுமையை "மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள், பிசைந்துதின வாடிய முலையள், பெரிதழிந்து, குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த முற்றா இளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று, நீருலையாக ஏற்றி" என்றும், "இல்லுணாத் துறத்தலின், இன்மறந்துறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன். கூழுஞ் சோறும் கடைஇ யூழின் உள்ளில் வறுங் கலந் திறந்தழக் கண்டு, மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும் நொந்தனளாகி" எனவும் அவனே பாடுகிறான். இவனது வறுமையை மேலை நாட்டு வீரப் புலவனாகிய டாக்டர் ஜான்சன் (Dr. Johnson) என்பவனது வறுமையோடுதான் ஒப்பிட முடியும். என்றாலும் என்ன? வறுமையுள் ஆழினும் வீரன் வீரன் தானே! இவனது செயலைச் சற்று நோக்குவோம். வெளிமான் என்ற அரசனைச் சென்று இப் புலவர் பாடினாராக, அவன் துஞ்சுவான், தம்பியைத் தா