பக்கம்:இன்றும் இனியும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர் வழிபாடு 23 என்ன, அவன் புலவனது அருமை அறியாது சிறிது கொடுத்தான். வீரக் கவிஞனது மனந் தாளுமோ? "கற்றுாண் பிளந்திறுவ தல்லால் பெரும் பாரம் தாங்கில் தளர்ந்து வளையுமோதான்' என்றபடி, அவனது பரிசிலை மறுத்துச் சென்றான் புலவன், அம்மட்டோடு நின்றனனோ குமணவள்ளலைச் சென்று பாடி ஒரு யானை பெற்று அதனைக் கொணர்ந்து வெளி மானுடைய ஊரில் அவனது கடி மரத்தில் கட்டினான். அவனிடஞ் சென்று, அரசனே! இரவலர் புரவலை நீயுமல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையு மல்லர்; இரவலர் உண்மையும் இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண்; இனி, நின்னூர்க்கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல் யானை எம் பரிசில்; கடுமான் தோன்றல் செல்வல் யானே” எனக் கூறித் தனது பரிசில் யானையை வெளிமானுக்குத் தந்து சென்றனன் ஆ! போலி நாகரிகத்தில் மூழ்கி இதுவே வீடு எனத் தருக்கித் திரியும் தமிழ் நாடே! சற்று நின்று ஆராய்வாயாக! எது வீரம்? எது செய்தும் உயிர் வாழலாம் என நினைக்கும் தற்கால மனப்பான்மை வீரமா? இப் பழந் தமிழ்ப் புல்வனின் மன உறுதி வீரமா? இனி, வீரர்கள் தீர்க்கதரிசிகளாக இருக்கக் கூடுமெனக் கூறினோமல்லவா? இவ்வகை வீரர்கட்கும் கவி வீரர்கட்கும் வேற்றுமை மிகுதியாக இல்லை. இருவரும் இனி ஏனைய வீரவகையினரும் ஒருவகை யினரே! ஒரே தீயினின்று பற்றப்பட்ட சிறு தீச்சுடர்களே. மின்சாரம் ஒன்றேயாயினும் விளக்குகள் பல நிறமுடையனவாய்த் தோன்றும்ாப் போல, இவ் வீரரும் அவ்வப்பொழுதுக் கேற்பப் பல பெயர் தாங்கிப் பல நெறியில் வாணாளைச் செலுத்துவர்.