பக்கம்:இன்றும் இனியும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அ.ச. ஞானசம்பந்தன் யாவரும் விரும்பத்தகுந்த அரச செல்வத்தைத் தானே துறந்து கடுந்தவ மியற்றிய புத்த தேவனது வீரம் எங்கே? அதுவும் இன்பந் துய்க்கும் இளமைப்பருவத்தே, கட்டழகு கழலாத காலத்தே, இட்ட செல்வத்தை விட்டுப் பிரிதலும், அதனால் மாறனை வெல்லும் வீரன்’ எனப் பெயர் பெறுதலும் எளிதோ ? இஃதொன்றோ? தீநெறிக் கடும்பகை கடிதலும், துறக்கம் வேண்டாத் தொன்மையும், கண் பிறர்க்கு அளிக்கும் தன்மையும் யாவர்க்கும் எளிதிற் கிட்டும் வீரமோ? இத்தகைய வீரமுடைய வீரனை உலகம் வழிபாடு செய்து அவனது சொற்களைப் பொன்னே போல் போற்றி அவனது சமயத்தில் சேராது என்ன செய்யும்? உலகத்து உள்ள துன்பங்கட்கு எல்லாம் ஆணிவேரானது ஆசை. அவ்வாணி வேரை அறுத்து எரியிடின் வீடுபேறு அடைவது திண்ணம் என்ற பேருண்மையை, துக்கம், துக்க உற்பத்தி, நிவாரண மார்க்கம், நிவாரணம் என அஞ்சாது எடுத்துக் கூறிய வீரன் யார்? அவ் வீரன் திருவடிகளை வணங்குத லல்லது வாழ்த்தல் நம் நாவிற்கு அடங்குமோ? இவ் வீரர்கள் கருவில் திருவுடையார் என முன்னமே குறிப்பிட்டோமன்றோ! எனவே, இவர்க்கு வயது, அனுபவம் முதலிய கருவிகள் வேண்டுவ தில்லை. இவைகளை அவர்கள் தேடாது, அவைகள் அவர்களைத் தேடிச் சென்றடைகின்றன. எக் காரணத்தால் புத்த தேவனது பொன்னுரைகள் இவ்வளவு விரைவில் மக்கள் உள்ளத்தே சென்று பதிந்தன: அக் கருத்துகள் மிகப் புதியன எனக் கொள்வதற்குமில்லை. எனினும் கூறுவான் தன்மை நோக்கி அவை வன்மை பெறுகின்றன. அம்பு ஒன்றே யாயினும், எய்வானது திறத்தால் அது வேகம்