பக்கம்:இன்றும் இனியும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர் வழிபாடு 25 பெறுதலை ஒப்ப, வீர உரைகளும் கூறுவோனது உண்மைக் குணம், சத்தியம் முதலானவற்றையொட்டி உரம் பெறுகின்றன. Sincerity என்ற ஆங்கிலப் பதத்தை யொட்டி ஆன்மபூர்வம் என்ற சொல்லை ஆளுவோ மானால், கூறுபவன் ஆன்மபூர்வ உண்மையை யொட்டி வார்த்தைகள் வன்மையடைகின்றன எனக் கூறலாம். இத்துணைப் பெரிய உலகில் போலி வீரர்கள் தோன்றுவதும் இயல்பே. இனி அவர்களுடைய மொழிகளும் இத்தன்மையுடையனவோ என வினவு வார்க்கு, அவரது போலி உள்ளத்திற்றோன்றிய மொழிகளும் போலியாய் வன்மை இழப்பன எனக் கூறுவோமாக ஒரு வீரன் அறிவு முதலானவற்றிற் குறைந்தவனாகக் கூட இருக்கலாம். எனினும் ஆன்ம ர்வ உண்மை உடையவனாயிருத்தல் வேண்டும். அஃதொன்றே வீரர்க்குப் பெரிதும் வேண்டப்படுகிறது. அஃதின்றேல் பிறவெல்லா மிருந்தும் பயனில்லையாம். கண்ணப்பர் சரிதங் காண்பார்க்குத் தெற்றென விளங்கும் பேருண்மை இதுவன்றோ! உலகிய லறிவாலும் சாத்திரக் குப்பையாலும் குறைந்து விளங்கிய திண்ணனார்க்கு பிறர்பால் காணவியலாத ஆன்மபூர்வமான அன்பு இறைவனிடமிருந்தமை யாலேயே ஆறு நாட்களில் அவர் ஆட்கொள்ளப் பட்டார். எனவே, வேண்டப்படுவது அன்பேயாம். போலி வீரன் அவன் காலத்து ஒரு வேளை ஏனைய வன்மைகளால் தன் மொழிகளை மெய்ப்போர்வை போர்த்து அமரச் செய்யலாம். ஆனால், அவனுக்குப் பிறகு, காலம் என்னும் திரை ஓயாது அதன்மேல் மோதுதலாலும், ஏனைய மக்களது ஆராய்ச்சி என்னும் உப்பங்காற்றாலும், பிற உண்மை வீரர்களுடைய மொழிகள் என்னும் பெரும் புயலாலும் தாக்குண்டு,