பக்கம்:இன்றும் இனியும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அ.ச. ஞானசம்பந்தன் போலி வீரர் எழுப்பிய மாடங்கள் கால்கோள் வலிமையற்று கொன்னே வீழ்ந்துபடும். எனவே, 6T6)Jffஎழுப்பிய மாடங்கள் இன்றும் நின்று நிலவு கின்றனவோ அவருடைய மொழிகளில் ஆன்மபூர்வம் துளும்பக் காணலாம். இன்னா செய்தாரை ஒறுக்கும் முறையில், சிலுவையில் வைத்தறையுங் காலத்தினுங் கூட "இறைவனே இவர்கள் அறியாது செய்யும் பிழையைப் பொறுத்தருள்க" எனக் கூறியவர் உண்மை வீரம் உடையார் என்பது, இன்றைக்கு உலகில் எத்துணை மக்கள் அவர் மதந் தழுவியுள்ளார்கள் என்பதாலே விளங்கும். - இனி, மன, உடல் வலிமையுடையாரும் வீரராய்ப் போற்றப்பட்டமைக்குப் பல உதாரணங்கள் புறம் முதலிய நூல்களில் பரக்கக் காணலாம். இவ் வீரத்தின் பயனாக, தான் என்ற முனைப்பற்றவர் பலர். சிறுத் தொண்டர், தான் பெற்ற ஒரே மைந்தனைத் தனது கொள்கையை நிலைநிறுத்துதற் பொருட்டாகக் கறி செய்ததும், இயற்பகை நாயனார் தனது மனைவியைக் கிழ அடியாருக்கு அளித்ததும் ஒப்பற்ற மனோ வலிமையை விளக்குகின்றன. இத்தகைய வீரச் செயலைச் செய்தமையாலேயே அவரை உலக இயலுக்கும் புறம்பானவர் என்ற பொருளில் இயற் பகையார் என்ற பெயரை இட்டனர். இனி அடியார் அவரை விளிக்கு முறையிலும் "செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஒலம்" என்று அழைக்கின்றார். வீரரை வழிபடு முறையில், உடல் பொருள் ஆவி அனைத்தை யும் அவர்பால் தந்து, தான் என்ற முனைப்பற்று வழிபடலே முறையாம். தான் கொண்ட கொள்கையை நிலை நிறுத்துவான்வேண்டி எதனையும் ஈய வல்லவனே வீரனாவான். அது வீர உணர்ச்சியின்