பக்கம்:இன்றும் இனியும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர் வழிபாடு 27 அடிப்படையாம். எனவே, அம் முறையில் இயற் பகையாரது செய்கையை ஆராய்ந்து பார்ப்பின், தான் செய்த வீர வழிபாட்டின் நிமித்தம் அவர் அவ்வாறு செய்தாரென்பது விளங்கும். எனவே, அச் செய்கையில் தமது புல்லிய அறிவைச் செலுத்தி ஆராய்ச்சி செய்து, இது தகாத செயல் எனக் கூறுவான் புகுதல் அறிவுடையார்க் கழகன்று. சர் பிலிம் சிட்னி என்ற வீரன், தனக்குரிய பருகுநீரைப் பிறனுக்குத் தந்து தனது இன்னுயிரை நீத்ததும், சிபி என்ற மன்னர்பிரான் புறாவொன்றின் பொருட்டாகத் துலை புக்கதும், பிம்பிசார மன்னனிடம் ஆட்டிற்குப் பதிலாகத் தனது தலையையே வெட்டலாம் எனப் புத்தர்பிரான் கூறியதும், பிறர் பொருட்டாக இயேசுபிரான் சிலுவையில் மாண்டதும், இலெனின் இரவியாவின் பொருட்டாகத் தான் உயிர் நீத்ததும் வீரமற்ற பேடியர் செய்கை என இப் பகுத்தறிவாளர் அறிவையிழந்து கூறப்புகுவரேல், இயற்பகையாகிய வீரனின் செயலையும் இழிவு படுத்திக் கூறலாம். வீரர் வழிபாடு, அடிமை அறிவை மிகுதிப்படுத்தும் எனக் கூறும் இவரது மடமை என்னே! அவ்வாறு சொல்லித் தருக்கித் திரியும் அவரே, ஒரு வகையில் தத்தம் தலைவரை வீர வழிபாடு செய்வதை மறக்கின்றனர் போலும்! உடல், மன வீரமும் அதனாற் செய்யப்படும் செயல்களும் போற்றற்குரியனவே. தனது வலிமையால் பகைவரோடு பொருது இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனைப் பராவுகின்ற பண்டைய வழக்கம் எத்துணை அருங்கருத்தை உள்ளடக்கி நிற்கின்றது. அவ் வீரனது பருவுடல் மறையினும் அவனது வீர உணர்ச்சி, குக்கும உடலுடன் ஆண்டுத் தங்கித் தன்னை