பக்கம்:இன்றும் இனியும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அ.ச. ஞானசம்பந்தன் வழிபடுவார்க்கு நன்மை பயக்கின்றது. அதனாலன்றோ வீரக் கண்ணகிக்குச் செங்குட்டுவன் கோயில் எடுப்பித்தான். இளங்கோவடிகள் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என ஒரு காவியக் கோயில் எடுத்தார். அக் காலத்திலேயே மணிமேகலை முதலிய பெரியார்களுங்கூட இவ் வீரத்தாயை வழிபட்டதாக அறிகின்றோம். இதுகாறும் கூறியவற்றான் வீரர் வழிபாட்டின் தன்மையையும் பெருமையையும் ஒருவாறு உணரு கிறோம். ஆதலால், சமயப் பூசல் நிறைந்த இற்றை ஞான்று சமரச சன்மார்க்க நெறியின் இன்றியமை யாமையைக் கூறி அறைகூவி யழைக்கும் சமயத் தலைவரும், பெண்ணடிமையை மிதித்துப் பேதைமைப் பேயை மண்டையிலடித்து ஒடுக்கிய சிம்மமும், புத்தம் புதிய கலைகள் தமிழில் வருமாறு எழுதிய புலவர் சிகாமணியும், தொழிலாளர் இன்னல் களைவேன் என அறைகூவி வந்து தொழிலாளர் சங்கங்கண்டு அவர் துயர் களைந்த வீரரும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்றுணர்ந்து பணியாற்றும் தொண்டரும் ஆகிய திரு.வி.க. அவர்கள் போன்ற வீரர்களைத் தமிழ்நாடு போற்றுமாக அதனாலேற்படும் பெரும் பயன்களை அடையுமாக!