பக்கம்:இன்றும் இனியும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பெண்மை விரும்பினார் சென்ற நூற்றாண்டில் நம் நாட்டில் தோன்றி, இந் நாடும் உலகமும் நலம் பெறத் திருவருட்பா என்ற நூலை அருளிச் செய்த இராமலிங்க அடிகளாரின் திருவுருவத்தை நம்மில் பலரும் கண்டிருக்கின்றோம். முக்காடிட்டு, கைகளைக் கட்டி நிற்கும் அத் திருவுருவம் முதன் முதலாகப் பார்ப்பதற்குப் பெண் வடிவோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கும். நித்திய பிரமசரியம் காத்த ஆண்மை நிறைந்த வீரர் ஒருவருடைய உருவம் பெண்மைக் கோல்ம் பூண்டு, கண்டவர்கள் பெண்ணோ என்று ஐயுற வேண்டிய நிலையில் அமைந்திருப்பது ஏன்? ஒரளவு சிந்தித்துப் பார்த்தால், ஆண்மையில் தலைசிறந்து நின்ற அடியார்கள் அனைவரும் ஏறத்தாழ இதே நிலையை அடைந்திருப்பார்கள் போலும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதலிய பெருமக்களுடைய உருவத்தை நாமோ, அன்றி அத் திருவுருவங்களைச் சமைத்த சிற்பிகளோ நேரில் கண்டதில்லை. ஆதலால், அவற்றைக் கொண்டு ஒரு முடிவுக்கும் வரலாகாது. ஆனால், நேரில் கண்டு படம் வரையப்பட்ட சிறப்புடையவர் வள்ளலார். எனவே, அவருடைய வடிவத்தையும் இராமகிருஷ்ண பரம