பக்கம்:இன்றும் இனியும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அ.ச. ஞானசம்பந்தன் ஹம்சர் போன்றவர்களின் வடிவத்தையும் * எடுத்துப் பார்ப்போமானால், இவர்கள் அனைவரும ஓரளவு பெண்மை வடிவத்தைத் தாங்கி நிற்பதை அறிய முடியும். புலனடக்கம் என்ற ஒன்றை முழுவதும் கைவரப் பெற்று, ஐய உணர்வை ஒழித்து, மெய்யுணர்வு கைவரப் பெற்று நின்ற இவர்கள் வீரர்கள் அல்லரோ? இப் பெரு வீரர்கள் ஓரளவு பெண்மை வடிவைத் தாங்கினர் என்றால், இதில் ஏதோ ஒரு புதுமை இருத்தல் வேண்டும். இதுபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மூன்று வயதிலேயே பாடத் தொடங்கிய ஞான சம்பந்தப் பெருமான் ஆண் மகனாக இருப்பினும் என் உள்ளம் கவர் கள்வன். பெம்மான் இவன் அன்றே என்று பாடுகிறார். எனவே, மூன்று வயது ஆண் மகன் தம் உள்ளம் கவர் கள்வன் ஒருவன் இருக்கிறான் என்று பாடினாரானால், இதில் ஏதோ புதுமை உளது எனக் கருதலாம். ஒருவேளை, மிக இளம் பிராயம் உடையவராதலால், ஆண் பெண் வேறுபாடின்றிச் சிறிதும் கவலைப்படாமல் பாடினாரோ! அவ்வா றாயின், மிக முதிர்ந்த பருவத்தினராகிய திருநாவுக்கரசு பெருமானாரும், வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும். என்று ஏன் பாட வேண்டும்? எனவே, மிக இளம் பிராயத்தினராகிய திருஞான சம்பந்தரும், மிக முதிர்ந்த பருவத்தினராகிய நாவுக் கரசரும் தம்மைப் பெண்ணாகவே உருவகித்துக் கொண்டு, தம்முடைய தெய்வக் காதலைப் பாடுவார்களேயானால், நாம் மேலே கூறியபடி இதனுள் ஒரு சிறப்பு இருக்கிறது என்ற கருத்து இன்னும் வலியுறுகின்றது. -