பக்கம்:இன்றும் இனியும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மை விரும்பினார் 31 இவர்கள் இருவர் மட்டோ இவ்வாறு பாடினர்? என்றுமே மணமகனாகக் கோலம் பூண்டு இரு மனைவியரை மணந்தவராகிய சுந்தரரும் இதற்கு விலக்காகாமல் உள்ளாரெனின், இதன் அடிப்படை யாது? சைவ சமய குரவர்களாகிய இவர்கள் மட்டுமல்லாமல், வைணவராகிய நம்மாழ்வாரும் தம்மை நாயகியாக உருவகம் செய்துகொண்டு பாடியதைக் கேட்கிறோம். இவற்றிலிருந்து தெற்றென விளங்கும் ஒரு கருத்துக் கூர்ந்து பார்ப்போருக்குப் புலனாகாமல் போகாது. புறக்கண் கொண்டு நம் போன்றவர்கள் பிறருடைய புற வடிவத்தை ஆராய்ந்து ஆண் என்றும், பெண் என்றும் வேறுபடுத்திக் காண்கின்றோம். ஆனால், ஆண்மை பெண்மை என்ற தன்மைகள் கேவலம் புற உடலைக் கொண்டு மட்டும் அமைவது இல்லைபோலும். பெண்ணாக உடம்பு பெற்று வாழ்கின்றவர்களுள் சிலர் பெண்மைக் குணம் ஒரு சிறிதும் இன்றி, ஆண்களுக்குரிய அதிலும் முரட்டு ஆண்களுக்குரிய தன்மையைப் பெற்று விளங்கக் காண்கின்றோம். அதேபோல் ஆண் உடம்பு பெற்றோர்களுள் சிலர் பெண்மைக்குரிய தன்மை விளங்கப்பெற்று வாழ்வதைக் காண்கிறோம். எனவே, ஒருவரை ஆண் என்றும், ஒருவரைப் பெண் என்றும் அழைப்பதற்கு அவர்களுடைய புற உடல் நிலை மட்டும் காரணம் அன்று போலும் எனச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. விளக்கமாகக் கூறவேண்டுமே யானால், புற வடிவால், உடல் தன்மையால் ஆண் என்றும் பெண் என்றும் பகுத்துக் கூறுவது ஓரளவு சரி எனினும் முற்றிலும் சரி என்று கூறவியலாது. ஆண்மைக் குணத்துடன் ஆண் வடிவம் பெற்றோரை ஆண் என்றும் பெண்மைக் குணத்துடன் பெண் வடிவு