பக்கம்:இன்றும் இனியும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அ.ச. ஞானசம்பந்தன் பெற்றோரைப் பெண் என்றுங் கூறுதலே சரியானது. ஆண் ஒரளவு பெண் வடிவு பெற்றாலும் மாறிப் பெற்றாலும் அவர்களை 'அலிகள் என்று கூறுகிறோம். ஆனால், வடிவால் மாற்றமடையாமல் ஆண் பெண் தன்மை இல்லாதவர்களைக் குறிப்பிட நம்மிடம் சரியான சொல் இல்லை. அவ்வாறாயின், ஆண்மை பெண்மை என்று கூறுகின்ற பண்புகளின் அடிப்படை வேறுபாடு யாது? யான் என்னும் அகங்காரத்தின் அடிப்படையில் தோன்றுவது ஆண்மை என்று ஓரளவு சுருங்கக் கூறலாம். பிறர் வாழத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளுகின்ற தன்மையைப் பெண்மை என்று கூறலாம். பெண்மையிலுள்ள தனிச் சிறப்பு யாதெனில், தன்னலம் என்ற ஒன்றைக் குடும்பம் என்று ஒன்றுக்காக அல்லது பிறருக்காக முற்றிலும் அழித்துக்கொண்டு வாழ்வதே ஆகும். இதனால்தான் கைம்மாறு கருதாமல் உயிர்களுக்கு அருள் புரியும் இறைவனை, தாம் எத்தனை பிழை செய்தாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு தம்மை ஆட்கொள்ளுகின்ற இறைவனை, தாய் என்று பெரியவர்கள் அழைக்கின் றார்கள். மூ ஏழ் உலகுக்கும் தாயே! என்றும், பால் நினைந்துாட்டும் தாய்' என்றும் பேசுகிறார்கள். இறைவனையே தலைவனாகக் கொண்டு. தம்மைத் தலைவியாக நினைந்து திருக்கோவையார் போன்ற ஒரு பிரபந்தம் பாடுகின்ற - மணிவாசகர் போன்ற பெரியவர்கள்கூட இறைவனுடைய ஒருசில குணநலன் களைச் சிந்திக்கும் போது, அவன் தலைவன். புருஷோத்தமன் என்பவற்றையெல்லாம் மறந்து, அவனைத் தாயே என்றும். தாயுமானவன் என்றும் கருதிக் கசிந்து உருகுகின்றார்கள். எனவே, ной