பக்கம்:இன்றும் இனியும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மை விரும்பினார் , 33 ஷோத்தமனாகிய இறைவனையும்கூடத் தாய் என்று நினைத்துப் போற்ற வேண்டிய சூழ்நிலை ஏன் உண்டாகிறது? உயிர்கள் பிழை செய்யினும் அவர்களுடைய பிழையைப் பொறுத்து, அருள் சுரக்கின்ற காரணத்தினாலேதான் இறைவனைத் தாய் என்று போற்றுகின்றார்கள். அதேபோல இந்த உலகிடைத் தன்னலம் என்ற ஒன்றை அறவே அழித்து, பிற உயிர்கள் நன்கு வாழவேண்டுமென்ற பெரும் கருணையினாலே உந்தப்பெற்று, அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் துணிந்த பெரியவர்களைத் தாய்த் தன்மை பெற்றவர்கள் என்று கூறுகிறோம். நம் போன்றவர்கள் தொடர்பு உடையவர்களிடத்தில் மட்டுமே அன்பு பாராட்டுகிறோம். ஆனால், இயேசு கிறிஸ்து, வள்ளலார், திருஞானசம்பந்தர், நம்மாழ்வார், இராமகிருஷ்ணர் போன்ற பெரியவர்கள், தொடர் புடையவர் இல்லாதவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரிடத்தும் அன்புக்கு மேற்பட்டதாகிய) அருளை, கருணையை வாரி வழங்கினார்கள். ஆகையி. னாலேதான், கருணையே வடிவான இவர்கள் அகங்காரம் என்ற ஒன்றை அறவே ஒழித்து, பிறர் வாழத் தம்மைத் தியாகம் செய்கின்ற பேரருளாளர் களாகவும், பெண்மைத் தன்மை பூண்டு ஒழுகினவர் களாகவும் விளங்கக் காண்கிறோம். பெண்மையை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இளமை, அழகு முதலியவற்றோடு கூடிய முதற் பகுதிப் பெண்மை, தனித்து வாழாமல் தலைவன் என்ற ஒரு கொழுகொம்பைப் பற்றியே வாழ முடியும். பெண்மைத் தன்மை பெற்றவர்களாகிய இப் பெருமக்கள் இறைவன் என்ற புருஷோத்தமனைத் தம் தலைவனாகக் கருதி அவன்மாட்டுத் தெய்வக் கர்தல் இ.இ.-3