பக்கம்:இன்றும் இனியும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அ.ச. ஞானசம்பந்தன் கொண்டு வாழ்ந்ததாகத் தெரிகின்றது. உண்மைக் காதலில் தான் என்ற முனைப்பு முற்றிலும் அடங்கி விடுகிறது. அவன், தான் இடைப்பட்ட காதல் உணர்வு என்ற மூன்றாக இருக்கும்வரை அது தலையாய காதலன்று. மூன்றும் ஒன்றாகும்பொழுது அனுபவம் ஒன்று மட்டுமே எஞ்சுகிறது. அகங்கார மமகாரம் அற்ற நிலையில்தான் உண்மைக் காதல் அனுபவம் தோன்றும் என்பதையே வள்ளுவரும் 'மலரினும் மெல்லிது காமம் என்று கூறினார். அகங்காரத்தை அழித்த இப் பெரியார்கள் இறையனுபவம் என்ற காதலில் மூழ்கியவர்கள். அக்காதல் முற்றிய நிலையில் உலகியல் பெண்கள் அக, புற வாழ்க்கையில் மேற்கொள்ளுகின்ற அனைத்தும் இவர்களையும் அறியாமல் இவர்களை வந்தடைந்தனவோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இனி பெண்மையின் இரண்டாவது பகுதி தாய்மையாகும். தாய்மையின் தனிச்சிறப்பு, பிற உயிர்கள் வருந்தும்போதெல்லாம் தானும் கரைந்து உருகுவதாகும். எவ்வாறாயினும் பிறர் துயர் துடைக்க முற்படும் அன்பே தாய்மையாகும். இன்னும் கூறப்போனால், மிக இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளுக்குக் கூடத் தாய் மனம் துயர்ப்படுகிறது. சாதாரண உலகியல் தாய்மார்களே இவ்வாறு உள்ளனர். எனின், தாய்மைத் தன்மை பெற்ற இப் பெரியார்களைப் பற்றிக் கூற வேண்டா. முன்பின் பழக்கமில்லாத வணிகப் பெண் ஒருத்தி கணவனை இழந்து கவலையுறக் கண்ட திருஞானசம்பந்தர், மக்கள் பிறப்பதும் இறப்பதும் இவ்வுலகில் அன்றாடம் நிகழுகின்ற ஒன்றுதான் என்பதை நன்கு அறிந்திருந்தும்கூட, தாய்மைத் தன்மை தம்மிடம் மிக்கு இருந்த காரணத்தால் உடனே கோயிலுக்குச் சென்று,