பக்கம்:இன்றும் இனியும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மை விரும்பினார் 35 இறைவனைப் பாடி அவள் துயர் போக்கப் பாடுபடுகின்றார். இயேசுநாதர், இராமலிங்கர், இராமகிருஷ்ணர் போன்றவர்கள் இவ்வாறு பிறர் படுகின்ற துயரத்தைக் கண்டு அதனைப் போக்க அரும் பாடுபட்டு இருக்கின்றார்கள். வள்ளலார் இன்னும் இத் தன்மையில் மிக மிக உயர்ந்து சென்றுவிட்டதை அறிகின்றோம். பெண்மைக் குரிய இரண்டு தன்மைகளிலும் வள்ளலார் மேம்பட்டு நிற்கின்றார். தியாகேசனைத் தமது காதலனாகக் கொண்டு அக் காதலிலே திளைத்து மூழ்கித் தாம் பெற்ற இன்ப அனுபவங்களை ஆயிரக்கணக்கான பாடல்களாக வடிக்கின்றார். அக் காதலிலே தோன்று கின்ற இந்த அனுபவம் வளர வளர, புறத்தேயும் சில அடையாளங்கள் தோன்றும் போலும். தம்மை ஒரு பெண்ணாகவே பாவித்து இறைவனிடம் கொண்ட காதலால் ஓயாது அதையே நினைத்து மகிழ்ந்தும் வருந்தியும் வாழ்ந்ததால், தற்கருத்தேற்றம் (auto suggestion) என்பதற்கு இவர்கள் முழு இலக்கு ஆகின்றனர். ஓயாது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதனால், அதே நினைவாக இருப்பதால், தான் என்ற ஒன்றை அவ்வனுபவத்துள் கரைத்து விடுவதால் தானே அதுவாகி விடுகிறது. மனோதத்துவ நூலார் கூறும் இக்கருத்தைச் சைவ சித்தாந்தவாதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாதொன்று நினைக்கத் தான் அதுவாதல் என்று சொல்லிச் சென்றிருக்கிறார் கள். இக் கொள்கையின்படி இறைவனையே தலைவனாகக் கொண்டு, தம்மைத் தலைவி என்றே நினைந்து தலைவியாக வாழ்ந்தவர்கள் இப் பெரியார்கள். இவ்வனுபவ முதிர்ச்சியால் பெண் தன்மை மீதுர்தல் நடைபெறக்கூடியதுதான். ஆகவே,