பக்கம்:இன்றும் இனியும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அ.ச. ஞானசம்பந்தன் வள்ளலார் பெண் தன்மையைப் போற்றி வளர்த்த காரணத்தால் ஓரளவு பெண்ணாகவே ஆயினார் என்றால் அதில் வியப்பு ஒன்றும் இல்லை. பெண்ணினைப்பற்றிப் பேச வந்த தொல்காப்பிய உரை ஆசிரியராகிய பேராசிரியர் தாய்மைபற்றிக் கூறும்போது, மைந்தருக்கு நோய் இல்வழியும் நோய் உளதாங்கொல் என்று அஞ்சுகின்ற அச்சம்' என்று பேசுகிறார். எனவே, அச்சம் என்பது மகளிருக்கு உரிய இயல்பான ஒன்றாகும். இங்கு அச்சம் என்று பேசுவது தன்னைப்பற்றி ஏற்படுகின்ற கோழைத்தனமான பயமன்று. பிற உயிர்கள் அடைகின்ற துன்பத்தை நினைந்து அவ் வுயிர்கட்குத் துன்பம் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்று தோன்றுகின்ற அச்சமாகும். ஒருவேளை அவற்றிற்குத்துன்பம் நேரிட்டால் அதனைப் போக்க முடியவில்லையே. என்று தோன்றுகின்ற வருத்தத்தின்பாற்பட்ட அச்சமுமாகும். இத்தகைய தாய்மையில் பிறக்கும் அச்சத்தை அடிகளார் முழுவதுமாகப் பெற்றிருந்தார் என்பதைக் கீழ்வரும் பாடல்கள் நன்குணர்த்தும். - - § (ද් வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே விடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த - வெற்றரைக் கண்டுஉளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுஉளம் துடித்தேன் என்றும் காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன். காலின்மேல் கால்வைக்கவும் பயந்தேன் பாட்டுஅயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சனை படுக்கவும் பயந்தேன்