பக்கம்:இன்றும் இனியும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மை விரும்பினார் 37 நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக்கால் கீழே நீட்டவும் பயந்தேன் ... என்றும் கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன் மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்யெலாம் ஐயகோ மறைத்தேன் வையமேல் பிறர்தம் கோலமும் நடையும் வண்ணமும் கண்ணிலே சிறிதும் பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம்மிகப் படைப்பேன் என்றும் பாடிச் செல்கிறார். இரண்டாவதாகவும் மூன்றாவ தாகவும் காட்டப்பெற்றுள்ள பாடலைப் படித்தவுடன் ஒரு பெண் தன்னைப்பற்றிக் கூறுவது போலவே தோன்றும். இத் தமிழ்நாட்டுப் பண்பு குறையாத பெண் ஒருத்தியைப் படம் பிடிப்பது போன்றுள்ளன. இப் பாடல்கள். இத்துணைத் துரம் அடிகளாரின் மனம் தாய்மைப் பண்பில் பக்குவப்பட்டுவிட்டமையின், அவர் புறவடிவம் ஒரளவு பெண் தன்மையை ஏற்றுக் கொள்வதாயிற்று. இத் தன்மை மீதுர்ந்தமையின் உடம்பை வெளியே காட்ட அஞ்சி வெள்ளுடையால் மூடிக்கொண்டேன் என்று அவர் பாடுவது முற்றிலும் பொருத்தமேயாகும். - - ஆணவத்தை அறவே ஒழித்துச் சிவானுபவத்தில் ஒன்றி நின்ற அவர் பெண்மையை விரும்பி ஏற்றுக் கொள்பவராக ஆகிவிட்டார். புருஷோத்தமனாகிய இறைவனிடம் ஏற்பட்ட தெய்வக் காதலை, அகங் காரத்தைச் சுட்டு எரித்த பெண்ணாக மாறியே