பக்கம்:இன்றும் இனியும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அ.ச. ஞானசம்பந்தன் மேலே கூறப்பெற்ற பாடலின் அடுத்த அடியே போதுமானது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர் பாடிய பாடலாகும் அது. முரசு முழங்கு தானை மூவருள்ளும், அரசெனப் படுவது நினதே பெரும!” (35) என்று கூறிய புலவர் பெருமான் இன்னும் ஒருபடி மேலே சென்று, நாடு எனப்படுவது நினதே (35) என்றும் கூறிவிடுகிறார். தமிழ் நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், அரசன் என்று கூறினால் சோழனைத் தான் குறிக்குமாம்! நாடு என்று கூறினால், சோழ நாட்டைத்தான் குறிக்குமாம்! - - இன்னும் சில சந்தர்ப்பங்களில் இவர்கள் ஆளும் பகுதிகளை 'உலகம் என்றுகூடக் குறிப்பிட்டனர். 'பிரமனார் என்ற புலவர் பொதுமை சுட்டிய மூவர் உலகமும், பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்' (புறம், 357) என்று கூறிய அடிகள் ஆழ்ந்து நோக்கற் குரியவை. உலகம் என்ற சொல்லால் நாட்டின் ஒரு பகுதியைச் சுட்டிக்கூறுதல் அக்கால மரபுதான். "மாயோன் மேய காடுறை உலகமும் என்று தொல்காப்பியம் கூறுகிறது என்றாலும், 'மூவர் உலகம் என்று புறப்பாடல் புலவர் கூறும்பொழுது, அவர் இவர்களுடைய நாட்டின் பரப்பை ஒரளவு மிகுதிப் படுத்தியே கூறுகிறார் என்பது விளங்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் இம் மூவருள் வலிமைபெற்ற ஒருவன் ஏனைய இருவரையும் அடக்கி ஆளுதலும் உண்டு. இன்னும் கூறப்போனால், இவர்களுள் ஒவ்வொரு வனும் ஏனையோரை அடிப்படுத்தலையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். 'பிரமனார் 357-ஆம் பாடலில் பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் என்று கறுவது இவ்வாறு