பக்கம்:இன்றும் இனியும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் வேட்டை 41 ஒரோவழி ஏனைய இருவரையும் வெற்றிகண்ட ஒருவனையே குறிக்கிறது. - கரிகாற் பெருவளத்தான் போன்ற ஒரு சிலர் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று, பிற நாடுகளிலும் வெற்றி கண்டார்களாயினும், பெரும் பான்மையான தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டது பிற தமிழ் மன்னர்களையேயாம். தமிழனை மற்றொரு தமிழன் போரிட்டுத் தொலைப்பதைப் பெரு வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் அந்நாளில் பெரும்பான்மையான தமிழர். சில சந்தர்ப்பங்களில் இவர்களுடைய போர் அவ்வளவில் நின்றுவிடாமல், யாதொரு தீங்கும் புரியாத மக்களையும் வருத்தத் தொடங்கிற்று. வெல்லப்பட்டவர் நாட்டை (தமிழ் நாட்டின் மற்றொரு பகுதிதான்) அழித்து, நெருப்பூட்டல் ஒரு வழக்கம். கரும்பு அல்லது காடு அறியாப் பெருந்தண்பனை பாழாக - ஏம நல்நாடு ஒள்ளி ஊட்டினை (புறம், 16) (கரும்பு விளையும் விளை நிலங்களை எல்லாம் நெருப்பூட்டினாய்) என வரும் அடிகள் நம் சிந்தனையைக் கிளறாமல் இருக்க முடியாது. இவ்வாறு இவர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் பொழுதுகூட, தோற்றவரைப்பற்றி நினைத்த தில்லையா? அவர்களும் தம்மைப் போன்ற மொழிபேசும் நாகரிகம் உடையவர் என்ற எண்ணம் இவ் வெற்றி வீரர்கட்குத் தோன்றி இராதா? போரில்லாத நாட்கள் மிகவும் குறைவு என்று கூறத்தக்க முறையில் இவர்கள் வாழ்ந்துள்ளனர். இப் பெருமன்னர்கள் ஒரோவழி வாளாவிருந்தாலும்,