பக்கம்:இன்றும் இனியும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அ.ச. ஞானசம்பந்தன் இவர்கட்குக் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள் வாளா விருப்பதில்லை. இவ்வாறு போரிட்டு மடியக் காரணம் யாது? படை வைத்திருந்தமையின் வாளாவிருக்க முடியாமல் ஓயாது போரிட்டனரா? புறப்பாடல்களை ஒருமுறை புரட்டினவருங்கூட ஓர் உண்மையை அறியாமல் இருத்தல் முடியாது. ஏனைய எத்துணைக் காரணங்கள் இருப்பினும், இவர்கள் ஓயாமல் பூசலிட்டதற்குத் தலையாய ஒரு காரணம் காணப் படுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் காணப்பெறும் இரண்டு உணர்ச்சிகளே இதன் காரணம் என்று நினைய வேண்டியுளது. இயற்கையாகத் தோன்றும் வெறுப்பு உணர்ச்சி ஒன்று; ஏனையது, புகழ் ஈட்ட வேண்டும் என்று தோன்றும் உணர்ச்சி. இவை இரண்டும் கூடினவிடத்து விளைவது போரேயன்றி, வேறு யாதாக இருத்தல் இயலும்? மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாய்மாய்ந் தனரே (புறம், 165) (நிலை பேறில்லாத இந்த உலகில் புகழை நிலைநாட்டிப் பலர் மாய்ந்தனர்) சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றுஇதழ் அலரின் நிரைகண்டு அன்ன வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை எண்ணும் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே! மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே! புலவர் பாடும் புகழுடையோர் விகம்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப. (புறம், 27) (தாமரையின் மலர்களைப் போலப் பலரும் ஒன்றாகவே காட்சியளிக்கும் இவ்வுலகில், பிறரால்