பக்கம்:இன்றும் இனியும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் வேட்டை 43 பாடப்பெறும் சிறப்புடையோர் சிலரே! பலர் பிறரால் புகழப்படாமல் இறந்து போகின்றனர். புலவரால் புகழ் பெறும் சிறப்புடையோர் வானுலகமும் பெறுவர்) இத் தமிழருடைய புகழ்ப் பைத்தியம் மிகவும் அழகாக இருந்தது என்பதைக் காட்ட நூற்றுக் கணக்கான உதாரணங்கள் தர இயலும். - தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று (குறள், 236) என்று குறளாசிரியர் கட்டளை இடுமுன்பே இம் மக்கள் தம் வாணாளில் பெறவேண்டிய ஒரு குறிக்கோளாக இதனைக் கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறிய முடிகிறது. இலக்கணமும் இதற்குப் பெரியதேர்ர் இடந்தந்து, 'பாடாண் திணை' என்றதொரு திணையையே வகுத்துவிட்டது. . மனிதனாகப் பிறந்தவன் புகழ் ஈட்டியே தீர வேண்டும் என்றால், அதற்குரிய வழிகள் யாவை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? வழிகள் பலவாக இருக்கலாம். எந்த வழியை மேற்கொண்டால் புகழ் பேசுகிறவர்கள் எளிமையாகப் புகழ்வார்கள்? அந்த வழியே சிறந்த வழி என்று நினைத்திருத்தல் கூடும் அக்கால மக்கள். மேலும், புகழ் ஈட்டும் வழி மூலமாகவே தம்முடைய மனக்கருத்தையும் முற்றுப் பெறச் செய்யக்கூடுமாயின், அது மிகவும் நலமான தாகப்பட்டிருக்கும். இயற்கையாக மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுப்பதன்மூலம் இரண்டு பயன்கள் கிட்டுகின்றன. முதலாவது, யாரை வெறுக்கிறோமோ அவர்மேல் போர் தொடுத்து வெற்றிகாண முடிகிறது. இரண்டாவது, அவ்வாறு பெறும் வெற்றியைப் பிறர் புகழவும் காரணமாகிறது.