பக்கம்:இன்றும் இனியும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அ.ச. ஞானசம்பந்தன் இவ்வாறு இரண்டு வழிகளிற் பயன்பெறக் கூடுமாயின், வன்மை மிக்க அரசர்கள் போர் என்ற வழியை மேற்கொண்டதில் வியப்பிருத்தல் இயலாது. மேலும், அந்த அரசர்கள் புரியும் இந்தப் போர்களைத் தம்முடைய நாட்டு மக்களின் நலத்திற்காகவே செய்ததாகவும் கூறினர்; அம் மக்களும் இதனை நம்பினர். பிறருடைய நாட்டின்மேல் போர் தொடுத்துச் செல்லுதல் அரசர்க்குரிய அறமாகவும் போற்றிக் கூறப் பெற்றது. தற்காப்புச் செய்யுமுறையில் போரிடுதல் அன்றியும், பிறர்மேல் படைகொண்டு வலுப் போருக்குப் போதலும் அறமெனவே கருதப் பெற்றது. புகழ் வேட்டையாடப் பிறருடைய நிலத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் போரிடுதலை ஒரு வாய்ப்பாகக் கொண்டனர் அற்றை நாள் தமிழர், எவ்வளவு பெரிய அரசனும் இதற்கு விலக்காமாறு இல்லை. மேலும், ஓரிரண்டு போர்களில் வெற்றி கண்டுவிட்டால் அது குடிப்பழக்கம்போல் ஆகிவிடும். அவ்வெற்றி தந்த வெறி மேலும் மேலும் போர் செய்யத் துண்டும். தாம் இவ்வாறு போர் செய்து அதனால் பெறுவதாகக் கருதிய புகழ் உண்மையானதா என்று ஆராய அவர்கள் முற்படவில்லை. அரசராகத் தாம் பிறந்ததே போர் செய்யத்தான் என்றுகூடப் பலர் கருதிவிட்டனர். இத்தகைய ஒரு நிலையில் அறிவுடைப் பெருமக்கள் சிலர் மனத்தி லாதல் ஓர் ஐயம் தோன்றி இருத்தல் வேண்டும். கேவலம் போரிடுதல் ஒன்றுதானா புகழை வளர்க்கும்? இது தவிர இவ்வரசர் பெருமக்கள் செய்யத்தக்க நற் செயல்கள் வேறு இல்லையா? இவ்வாறு சிலர்