பக்கம்:இன்றும் இனியும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் வேட்டை 45 தம்மைத்தாமே கேட்டுக்கொண்டு பெற்ற விடைகளும் புறப்பாடல் முதலியவற்றில் காணக் கிடைக்கின்றன. 'மாங்குடி மருதனார் என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்க 'மதுரைக் காஞ்சி' என்றதொரு நூலையே (அவ்வளவு பெரிய பாடல் அது இயற்றினார் என்றால், பழந்தமிழர் போர் வெறி என்ற பாலைவனத்தில் இஃது ஒரு நீர் ஊற்றுப் போன்று காணப்படுகிறது. 782 வரிகளையுடைய அப் பாடலில், அப் புலவர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நல்லதோர் அறிவுரை வழங்குகிறார். r - - பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த விளங்குஇழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே - - (மதுரைக் காஞ்சி, 778-82) - (உனக்கிருக்கும் வாழ்நாள் ஓரளவுடையதாகலின், நல்ல முறையில் உண்டு உடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக!) - - - . . . . . இதே புலவர் ളുടേ மன்னனைப் பாடும் புறப் பாட்டு ஒன்றில் இன்னும் ஒருபடிமேலே செல்கிறார். ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து ஆங்கினிது ஒழுகுமதி பெரும ஆங்கது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப. (புறம், 24) இவ்வாறு, இன்புற்று வாழ்வதே வாழ்க்கை எனப்படும் என்று அவர் கூறும்பொழுதுதான்,