பக்கம்:இன்றும் இனியும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.6 % அச. ஞானசம்பந்தன் இவ்வாறு செய்யாதவர்களுடைய வாழ்வு எவ்வளவு பயனற்றது என்பதையும் அறிய முடிகிறது) போர்செய்தலையே தம் வாணாளின் குறிக் கோளாகக் கொண்ட இம் மன்னர்கள் புகழடை வதற்கு மேற்கொண்ட வழி சற்று விந்தையானதே! இதனைக் காட்டிலும் வேறு வழியில் வாழ்வதால் நல்லதொரு புகழை அடைய முடியும் என இவர்கள் ஏனோ நினைக்கவில்லை? ஆனால், இப் பேரரசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் சில சிற்றரசர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் மேற் கொண்ட குறிக்கோள் முற்றிலும் வேறானதாகக் காணப்படுகிறது. கடை எழு வள்ளல்களைப் பற்றியும் இப் புறப்பாடல் முதலியன பேசுகின்றன. அவர்களும் புகழ்படைத்தவர்களாகவே உள்ளனர். என்றாலும், என்ன வேற்றுமை? புகழ் என்ற ஒன்றை அடைய முற்றிலும் வேறுபட்ட இரு வழிகளைக் கையாண்டுள்ளனர். யாருடைய வழி சிறந்தது? போர் வெறி கொண்டு, நாட்டிற்கு நன்மை என்ற பெயரால் தமிழர்களுடைய குருதியைத் தமிழ் மண்ண்ணில் ஆறாகப் பெருகவிட்டுத் தம்முடைய மக்களும் தோற்ற மக்களும் ஒருசேர அவதிப்படச் செய்த இப் போர் வெறியர்களும் புகழடைந்து விட்டதாகச் செருக்குற் றிருந்தனர். பிறருக்குத் தீங்கு புரிவதைக் கனவிலும் கருதாதவர்களாய் வாழ்ந்த அவ் வள்ளல்களும் புகழ் பெற்றனர். அறிவின் துணை கொண்டு புகழ் தேட முயன்ற இப்போர் வெறியர்கள் எங்கே! உணர்வின் துணைகொண்டு கொடை என்ற சிறப்பால் புகழ் படைத்த வள்ளல்கள் எங்கே? இவ்விரு சாராரும் பெற்றது. ஒரே புகழ்தான் என்றாலும், இருவரும் கையாண்ட வழிகள் எவ்வளவு மாறானவை?