பக்கம்:இன்றும் இனியும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காலப்போக்கில் தமிழ் இலக்கியம் இருபதாம் நூற்றாண்டு "தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு குழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள். என்று உணரமுடியாத" இயல்பினையுடைய தமிழ்த் தாய் சென்ற இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தைப் பெரிய அளவில் பெற்று வாழ்கின்றாள். இருபத்தைந்து என்று சொல்வத னுடைய காரணம் அதற்கு முன்னர்த் தமிழில் இலக்கியம் இல்லை என்பதனால் அன்று. அதற்கு முன்னர் இருந்த இலக்கியத்தை, நாம் இன்று காணும் பேறு பெறவில்லை என்பதனாலேயே அவ்வாறு சொல்கிறோம். ஆனால், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சங்க இலக்கியப் பாடல்களைப் பார்த்தால் ஒரு பேருண்மை தெளிவாகப் புலனாகும். தலையாய கவிதைகள் என்று சொல்லத் தக்க சிறப்புகள் அனைத்தும் பொருந்திய சங்க இலக்கியப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் தோன்ற வேண்டுமே யானால் அதற்கு முன்னர் ஒர் ஆயிரம் ஆண்டுக ளாவது அந்த மொழியில் இலக்கியம் தோன்றி. வளர்ந்து இருக்க வேண்டும். திடீரென்று எந்த