பக்கம்:இன்றும் இனியும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம் 49 மொழியிலும் இவ்வளவு தரமான கவிதைகள் தோன்ற இயலாது. - - தொடக்கத்தில் காணப்படுகின்ற இவ்வளவு சிறப்புகளோடு கூடிய சங்க இலக்கியத்தைப் படிக்கின்றவர்கள், இடைக்காலத்தில் தோன்றிய கம்பன் முதலிய காப்பியங்களையும் கண்டுவிட்டு, இருபதாம் நூற்றாண்டுக்கு வந்தால் ஒரளவு ஏமாற்றத்தைப் பெறுவர் என்பதில் ஐயமில்லை. 'சென்று தேய்ந்து இறுதல்' என்று சொல்லும் குற்றத்திற்கே ஓரளவு நம்முடைய இலக்கிய வளர்ச்சியும் உட்பட்டு விட்டதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. சங்க இலக்கியம் ஒருபுறம் இருக்கட்டும். மிகப் பிற்காலத்தில் தோன்றிய குமர குருபரருடைய பாடல்களோடு ஒரளவு வைத்து எண்ண்த் தகுந்த பாடல்களாவது, இந்த நூற்றாண்டில் தோன்றியுள்ளனவா என்றால் வருத்தத்தோடு இல்லை யென்றே விடை கூற வேண்டியுள்ளது. இதன் காரணம் எதுவாக இருத்தல்கூடும்? பொதுவாக உலகமும், சிறப்பாகத் தமிழ் இனமும் சென்ற 19 நூற்றாண்டுகளில் பெற்ற அறிவு வளர்ச்சியைக் காட்டிலும் இந்த 60 வருஷங்களில் அதிகம் அறிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அறிவுத் திறத்தாலும், அதன் பயனாக ஏற்படுகின்ற விஞ்ஞான வளர்ச்சி போன்ற வற்றாலும் எல்லை மீறிய அளவு, உலகமும் நாமும் வளர்ந்துள்ளோம். ஆனாலும், அறிவோடு ஒப்ப வைத்து எண்ணவேண்டியதாகிய உணர்வு உலகத்தில், வளர்ச்சி பெற்றோம் என்று சொல்ல வழியில்லை. தரமான அந்தக் கவிதைகள் தோன்றிய காலத்தில், இஇ