பக்கம்:இன்றும் இனியும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அ.ச. ஞானசம்பந்தள் அறிவு வளர்ச்சியோடு உணர்வு வளர்ச்சியும் பெற்றிருந்தார்கள் போலும். உணர்வை ஓரளவு பலியிட்டு, அறிவை வளர்த்த காரணத்தாலும், அகமுக வாழ்க்கையைக் கைவிட்டுப் புறமுக வாழ்க்கையில் மிகுதியான அளவு சென்றுவிட்டமையாலும், இன்று சிறப்பாகக் கவிதை உலகமும், பொதுவாக இலக்கிய உலகமும் ஓரளவு வலிமையற்று நம்மிடையே விளங்கு கின்றன. மனிதனுக்கு இரண்டு கண்களும் தேவைப் படுவதுபோல, அறிவு, உணர்வு என்ற இரண்டுமே தேவைப்படுகின்றன. ஆனால், இந்த நூற்றாண்டில், உணர்வை ஓரளவு விற்றே அறிவை வளர்த்துள்ளோம். அதன் பயனாக, ஜெட் விமானத்தில் செல்வதும், "காசிநகர்ப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியில் கேட்பதற்குக் கருவி" செய்வதும் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால், ஒரு கம்பனையோ, வள்ளுவனையோ, இளங்கோவையோ, குமர குருபரரையோ பெற்றோம். இல்லை! .. கவிதை, இலக்கணம், இலக்கியம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த முறையில் அமைந்து கிடக்கும் வளர்ச்சி இல்லை என்றாலும், பரந்துபட்ட நிலையில் இலக்கியம் வளர்ந்து உள்ளது என்பதை மகிழ்ச்சி யோடு வரவேற்கவேண்டும். உரைநடை, புதினம் (நாவல், சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, மொழி பெயர்ப்புத்துறை ஆகிய இத் துறைகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளோம் இந்த நூற்றாண்டில். ஆனால், கவிதை, இலக்கணம் என்ற இரண்டு துறைகளிலும் வளர்ச்சி குன்றியுள்ளோம் என்பதும் மெய்ம்மைதான்.