பக்கம்:இன்றும் இனியும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம் 51 புற வாழ்க்கையில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி துரத்தை விரைவில் கடந்து செல்வதற்கு ஏற்பட்ட வாய்ப்புகள், தொழிற்புரட்சி, பிறமொழியாளருடைய கலப்பு, பிற மொழிப் பயிற்சி ஆகியவை பெரிய அளவில் தமிழ் மக்களுடைய வாழ்க்கை முறையையும் நோக்கத்தையும், மனப்பாங்கையும் மாற்றிவிட்டன என்பது உண்மைதான். அதன் பயனாகவே, இலக்கியத்தில் சில துறைகளில் பெரு வளர்ச்சியும், சில துறைகளில் வளர்ச்சியின்மையும் காணப்படுகின்றன. முதலாவதாக, கவிதையை எடுத்துக்கொள் வோம். பழம் பாடல்களிலுள்ள கற்பனைத் திறமும் காட்சிப் பரப்பும், சொல்வளமும், பொருள் செறிவும் இன்றைய கவிதைகளில் இல்லை. இருபதாம் நூற்றாண்டில் விரல்விட்டு எண்ணத் தகுந்த கவிஞர் களே தோன்றியுள்ளனர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க சுவாமிகள் (இவர்களைச் சென்ற நூற்றாண்டினர் என்பதே பொருத்தம்), கவிச்சக்கரவர்த்தி பாரதி என்ற இந்த மூவருமே தலையாய இடத்தைப் பெறுகின்றார்கள். அடுத்த நிலையில் வைத்து எண்ணத் தகுந்தவர்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, வெ.ப. சுப்பிரமணிய முதலியார், பஞ்சலட்சணத் திருமுக விலாசம் எழுதிய வில்லியப்பப் பிள்ளை, பாரதிதாசன் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, ஜெகவீர பாண்டியன் போன்றவர்கள். இவர்களை அல்லாமல் இளவட்டங்களில் மிகச் சிலர் நல்ல கவிதை எழுதும். திறமை பெற்றுள்ளார்கள். இராமலிங்க சுவாமிகள் எளிய, இனிய ஓசைநயம் பொருந்திய பாடல்கள் பாடுவதில் மிகவும் சமர்த்தர். நல்ல பண்பட்ட உள்ளத்தில் தோன்றிப் பக்திப் பெருக்கெடுத்தோடும்