பக்கம்:இன்றும் இனியும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அ.ச. ஞானசம்பந்தன் அவருடைய பாடல்கள் அவரே கூறியுள்ளபடி 'கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாக, கல் மனத்தையும் கனிவிக்கின்ற இயல்புடையதாக அமைந்து கிடக்கக் காண்கின்றோம். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் புலவருக்கு விருந்தாக அமைகின்ற இனிய கவிதைகள் நூற்றுக் கணக்கில் இயற்றியுள்ளார். அவர் காலத்துக்குரிய சொல் சிலம்பத்தை ஒரளவு மிகுதியும் கையாண் டுள்ளார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று சொன்னால் மிகையாகாது. அவர் காலத்தில் பெரு வழக்காக இருந்த ஸ்தல புராணம் போன்றவற்றில் அவருடைய கவிதை பலராலும் பாராட்டப்படாத நிலையை அடைந்து விட்டது. ஆனால், இருபதாம் நூற்றாண்டுக் குரியவராகிய கவிச்சக்கரவர்த்தி பாரதியார் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமை பெற்றவராய் விளங்கக் காண்கிறோம். ஆசிரியப் பாவை அவர் கையாளும்போது, சில சமயங்களில், சங்க இலக்கிய நடை துள்ளிவிளையாடக் காண்கின்றோம். அதே ஆசிரியப்பாவில் அவர் சொல்லியுள்ள கருத்தை நோக்கும்போது இருபதாம் நூற்றாண்டு மனிதனுடைய அறிவு வளர்ச்சியின் எல்லையில் பிறந்த அரும் கருத்துகள் களிநடம்புரியக் காண்கின்றோம். சுருங்கச் சொன்னால் பழமையும் புதுமையும் கலந்து பிழிந்து சாறாகக் கவிச்சக்கரவர்த்தி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய உலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் விளங்குகின்றார். - அடுத்துள்ள நிலையில் கவிமணி போன்றவர்கள் மென்மையான உள்ளம் படைத்தவர்கள் என்பதை அவர்கள் கவிதை நடை காட்டிச் செல்லும். ஜெகவீர