பக்கம்:இன்றும் இனியும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம் 53 பாண்டியனார் போன்றவர்கள் புலமை நயம் நிரம்பிய கவிதைகள் ஆக்கியுள்ளனர் என்றாலும் அவருட்ைய கவிதையிலும், நாமக்கல் இராமலிங்கம் போன்றவர் கவிதையிலும் கற்பனைச் செறிவும், தெளிவும், நடை மிடுக்கும் கொண்ட கவிதை எழுதுகிறார் கவிஞர் பாரதிதாசன். இளவட்டாரக் கவிகளில் வேலன்', துரன் போன்ற ஒரு சிலர் மிக இனிய நல்ல நடையோடு கூடிய கவிதைகள் எழுதுகிறார்கள். தொல்காப்பியமும், நன்னூலும், இலக்கண விளக்கமும் தோன்றிய தமிழ்மொழியில் இருபதாம் நூற்றாண்டுக்கேற்ப ஓர் இலக்கணநூல் தோன்றாதது புதுமைதான். இந்த நிலையைப் போக்க முயன்றவர் சோழவந்தான் இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் ஒருவரேயாவார். என்றாலும் அவருங் கூடப் பாயிர விருத்தி எழுதினாரே தவிர, காலத்திற் கேற்ற முறையில் புதிய இலக்கண நூல் ஒன்றையும் வரையவில்லை. புதிய வழி வகுக்கத் தமிழர்கள் எளிதில் முன் வர மாட்டார்கள் என்பதை இது நன்கு காட்டுகிறது போலும். இருபதாம் நூற்றாண்டில் ஒரளவு வளர்ச்சி யடைந்து இந்த நூற்றாண்டில் நன்கு நிலைபெற்று விட்ட தமிழ் உரைநடை, செறிவோடும் திண்மை யோடும் விளங்கக் காண்கின்றோம். இருபதாம் நூற்றாண்டில் உரைநடை என்று எடுத்துக்கொண்டால் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் கலங்கரை விளக்கமாய், உரைநடை எவ்வாறு அமைய வேண்டு மென்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாய், ஒருவர் விளங்கக் காண்கின்றோம். அவர் யார் என்று சொல்லத் தேவையில்லை என்றாலும், தமிழ்ச் சமுதாயம் அதிகம்