பக்கம்:இன்றும் இனியும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அ.ச. ஞானசம்பந்தன் மறதி உடையதாதலின் பெயரைச் சொல்லத்தான் வேண்டும் உரைநடைக்குத் தந்தையென்று சொல்லத் தகுந்தவர் பெரியார் திரு.வி.க. அவர்கள்தாம். உரைநடையால் தொண்டுபுரிந்த இருபதாம் நூற் றாண்டுப் பெரியார்களுள் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள், ந.மு. வேங்கடசாமி நாட்டார், மு. கதிரேசச் செட்டியார், கா. சுப்பிரமணிய பிள்ளை, மறைமலையடிகள், ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், சோம சுந்தர பாரதியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவ ராவர். இப் பட்டியல் முழுமையானதன்று. இந்த நூற்றாண்டில் தமிழ்மொழி வளரப் பேருதவி புரிந்த நிகழ்ச்சி பழந்தமிழ் இலக்கியங்கள் அச்சில் வரத் தொடங்கியதேயாகும். எனவே, தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட தமிழ் இலக்கியப் பதிப்பு வேலையில் முடிமணியாய் விளங்குபவர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயராவார். அவரை அடுத்து எஸ். வையாபுரிப் பிள்ளையும், பின்னத்துரர் நாராயணசாமி ஐயர், அ. கோபாலையர், சி.வை. தாமோதரம் பிள்ளை, வை.மு. சடகோபராமாநுஜா சாரியார் ஆகியோர்களும் இத் துறையில் பெருந் தொண்டு புரிந்துள்ளனர். - - உரைநடையோடு, தொடர்புடைய புதினத்தை யும், சிறு கதையையும் நன்கு வளர்த்த பெரியார்கள் பலர் இந் நூற்றாண்டுக்குரியவர்கள். வேதநாயகம் பிள்ளை, வி.ஆர். இராசமையர், மாதவையர், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார். வ.ரா, கல்கி கிருஷ்ண மூர்த்தி, புதுமைப்பித்தன், கு.பா. ராஜகோபாலன் ஆகியோர் இத்துறையில் தமிழன்னைக்குப் பெருந்