பக்கம்:இன்றும் இனியும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம் 55 தொண்டு புரிந்து, காலம் என்னும் ஏட்டில் தம் புகழ்நிறீஇத் தாம் மாய்ந்தனர். வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகின்ற கல்கியின் புதினங்கள் ஒரு வகையையும், மனித மனத்தின் போராட்டங்களை அக, புறக் கோணங்களிலிருந்து கண்டு அதனைத் திறனாய்வு செய்கின்ற புதுமைப் பித்தனின் கதைகள் ஒரு வகையையும் சேர்ந்தவை. இப் பெரியார்கள் இயற்றிய நூல்கள் அனைத்திலும் புதுமைப் பித்தனுடைய படைப்புகளைப் புரிந்து கொள்வது ஓரளவு கடினம். கதைப் போக்கைக் காட்டிலும் மனித மனத்துள் ஆழ்ந்து சென்று உணர்ச்சிப் போராட்டங்களைப் பாத்திரங்களோடு ஒன்றியும், ஒன்றாமல் பிரிந்து நின்றும், பரிவோடும் கடுமையாகத் தாக்கியும் எடுத்துக் காட்டுகின்ற குணச்சித்திரப் படைப்புகளை மிகுதியும் கையாண்ட வர் அவர் இலக்கியம் என்று கூற இயலாவிடினும் அளவால் அதிகமான புதினங்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை. மு. கோதை நாயகி அம்மையார் ஆகிய இருவர். - இறவாத வரம்பெற்ற இந்த எழுத்தாளர் சமுதாயத்தில் தலையாய இடம் பெற்று இன்றும் தமிழன்னைக்குத் தொண்டு செய்து வருகின்ற பெரியார்கள் மிகப் பலராவார். அனைவருடைய பெயரையும் குறிப்பிடுதல் இயலாது எனினும், பல்கலைச் செல்வர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு. வரதராசனார், கி.வா. ஜெகந்நாதன், அகிலன், ம.பொ. சிவஞானம், வெ. சாமிநாத சர்மா, பிறு சுகி சுப்பிரமணியம், தி.ஜர. பி.எஸ். இராமையா, நாரணதுரைக்கண்ணன் (ஜீவா) போன்றவர்கள். இருபதாம் நூற்றாண்டின் எழுத்துலக மேதைகளாவர்.