பக்கம்:இன்றும் இனியும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 : அ.ச. ஞானசம்பந்தன் இளம் எழுத்தாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர். இத்துணைப் பெரிய அளவில் இலக்கியம் வளர்வதற்குச் செய்தித்தாள்களும், வார, மாத இதழ்களும் முக்கியக் காரணமாகும். 'குழந்தை இலக்கியம்' என்ற புதிய துறை இந்தக் காலத்தில் தோன்றிய ஒன்று. இதுவரை குழந்தை பற்றிய இலக்கியம் உண்டே தவிர, குழந்தைகட்கு எனத் தனியே இலக்கியம் இல்லை. இப்பொழுது அழ, வள்ளியப்பா போன்றவர்கள் இத்துறையில் பணி புரிகின்றனர். பாரதியார், கவிமணி போன்றவர்கள் இத்துறையில் முன்னோடிகளாவர். பிற நாடுகள் சென்று அம் மக்களுடைய வாழ்க்கை வளம் முதலிய வற்றைக் கண்டு வந்தவர்கள் தம் அனுபவத்தை நூல் வடிவில் எழுதி வெளியிடுதல் பிற மொழிகளுள் பல. காலமாக இருந்து வருகின்ற ஒன்றாகும். இந்த நூற்றாண்டில் தமிழ்மொழி பெற்ற சிறப்புகளுள் இத்தகைய சுற்றுலா இலக்கியங்களும் சுயசரிதை' இலக்கியங்களும் முக்கியமானவை. எழுத்துலகில் அதிகம் ஈடுபடாமல் பெரும் புலவர்களாய்க் கல்லூரி முதலியவற்றில் பேராசிரியர்களாய் அமர்ந்து தமிழ் வளர்க்கும் பெருமக்கள் பலருண்டு. டாக்டர் சிதம்பரநாதன், டாக்டர் துரை அரங்கனார் போன்றவர்கள் தமிழ் உலகம் நன்கு அறிந்தவர்கள். பிறர் அறியாவிடினும் தம் கடமையை நன்கு செலுத்துவதால் தமிழ்நாட்டில் பல தமிழ் அறிஞர் களை ஆண்டுதோறும் நற்பயிற்சி மூலம் தோன்று விக்கும் எண்ணிறந்த தமிழ்ப் பேராசிரியர்களும், தமிழாசிரியர்களும் இக்காலத் தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளனர். .