பக்கம்:இன்றும் இனியும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம் 57 மேலே கூறப்பெற்றவர்கள் செய்துள்ள படைப் பிலக்கியங்கள் போக மேலை மொழிகளில் தோன்றி வளர்ந்த திறனாய்வும் இன்று தமிழ் மொழியில் தோன்றி வளருகிறது. ஒப்புயர்வற்ற உரையாசிரியர் களைக் கொண்ட தமிழ்மொழியில் திறனாய்வு என்பது புதுமையன்று என்றாலும், மேற்கத்திய முறையை ஒட்டி இப் புதிய இலக்கியம் உருவெடுத்து வளர்கின்றது. திறனாய்வின்மூலம் தமிழ்க் கவிதையின் பெருமையைத் தமிழருக்கும், பிற நாட்டாருக்கும் எடுத்துக் கூறிய முதற் பெருமை வ.வே.சு. ஐயர் அவர்களுடையதே. அடுத்துத் தமக்கே உரிய பாணியில், கம்பன் புகழ் பாடி அவன் கவிதைக்குத் திறனாய்வு செய்த பெருமை ரசிகமணி' டி.கே.சி. அவர்கட்கே உரியது. பேராசிரியர் அ. சீனி வாசராகவன், சிதம்பரரகுநாதன், மராபோ, குருசாமி, இராமகிருஷ்ணன் போன்றவர்கள் இத் துறையில் நற்பணி புரிந்து வருகின்றனர். புதிய துறையாதலின் குழப்பத்தைச் செய்கின்ற சிலருக்கும் இத் துறையில் பஞ்சமில்லை. இருபதாம் நூற்றாண்டுக்கே உரிய இலக்கியம் பத்திரிகை இலக்கியம். மேனாடுகளில் வளர்ந்துள்ளது போல் இத்துறை இன்னும் நன்கு வளரவில்லை எனினும், சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிதும் முன்னேறியுள்ளது என்பதில் தடை இல்லை. தமிழ்ப் பத்திரிகை உலகை அந்த நாட்களில் முன்நின்று வளர்த்தவர்கள் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. போன்றோர். செய்தித்தாள் முறையில் நாயுடுவின் 'தமிழ்நாடு முன்நின்றது. தூய, இனிய தமிழில் ஒரு தனித் தன்மையுடன் விளங்கியன திரு.வி.க.வின் தேசபக்தனும் நவசக்தி'யும். பல்லாண்டுகள் முன்னரே இலக்கியத்தாள் ஒன்றை நடத்த முடியும்